அட, இங்க தான் Bigg Boss Ultimate நடக்க போதா, தயாராகி வரும் செட் – வைரலாகும் வீடியோ இதோ.

0
433
biggbossultimate
- Advertisement -

உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பேராதரவைப் பெற்று வரும் நிகழ்ச்சி தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சி ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், ஐந்து வருடங்களாக இந்த நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தான் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கோலாகலமாக தொடங்கப்பட்டது. மேலும், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே கடந்த ஞாயிற்று கிழமை ப்ரம்மாண்டமாக நடந்தது. இதில் ராஜு டைட்டில் வின்னர் ஆனார். பிரியங்கா டைட்டில் வின்னர் ஆகவில்லை என்றாலும் ரன்னர் அதாவது இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார்.

-விளம்பரம்-

மூன்றாம் இடத்தை பவானி ரெட்டியும், நான்காம் இடத்தை அமீர் பிடித்து உள்ளார்கள். அதோடு பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து இருப்பதால் பிக் பாஸ் ரசிகர்கள் கொஞ்சம் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இந்த ஆண்டே மீண்டும் ஒரு புது வகையான பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்க இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி இந்தியில்தான் 15 வருஷங்களுக்கு மேல் கடந்து சென்றுகொண்டே இருக்கிறது. சொல்லப்போனால் இந்தி bigboss நிகழ்ச்சிக்கு பின்னர் தான் மற்ற மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

புது விதமான பிக் பாஸ் :

அந்த வகையில் கடந்த இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. அதாவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் வேறு இந்த பிக் பாஸ் வேறு. Voot Ottயில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியை கரன் ஜோகர் தொகுத்து வழங்கி இருந்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்கள் 13 பேர் மொத்தம் 42 நாட்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இது Voot Ottயில் மட்டுமே ஒளிபரப்பானது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் Voot சந்தாதாரகர்கள் இந்த நிகழ்ச்சியை 24 மணி நேரமும் கண்டுகளிக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது.

போட்டியாளர்கள் யார் யார் :

இந்நிலையில் தற்போது இதே கான்சப்டில் இந்த நிகழ்ச்சியை தமிழிலும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழில் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதில் தமிழ் பிக் பாஸில் 1 முதல் 5 சீசன் வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால், ஏற்கனவே பிக் பாஸ்ஸில் 5 சீசனில் பட்டத்தை வென்றவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் வாய்ப்பு இல்லை. அதே போல இந்த நிகழ்ச்சியையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

-விளம்பரம்-

சமீபத்தில் வெளியான ப்ரோமோ :

இந்த நிகழ்ச்சிக்கு பிக் பாஸ் அல்டிமேட் என்று பெயர் வைத்து உள்ளார்கள். அதுமட்டும் இல்லாமல் பிக் பாஸ் சீசன் 5வின் கிராண்ட் பினாலேவில் இந்நிகழ்ச்சி குறித்து கமலஹாசன் கூறியிருந்தார். இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப் படுவதாகவும் இதை ஹாட்ஸ்டார் ப்ளஸ்ஸில் பார்க்கலாம் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ ஒன்றும் வெளியானது.

Bigg Boss Ultimate Promo, Oviya And Vanitha Are Confirmed Contestants?

தயாராகி வரும் செட் :

மேலும், இந்த சீசனில் 16 கலந்துகொள்ள இருப்பதாக சமீபத்தில் தான் அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது. இதில் சீசன் 1 போட்டியாளர்களான பரணி, ஜூலி,, ஓவியா, சுஜா வருணி முதல் இந்த சீசன் தாமரை வரை கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக தயாராகி வரும் பிக் பாஸ் வீட்டின் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி இருக்கிறது.

Advertisement