-விளம்பரம்-
Home பிக் பாஸ்

Bigg Boss Tamil : ‘கமல் இடத்தில் சிம்பு’ – பிக் பாஸில் சிம்புவின் ஒரு நாள் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா ?

0
527
simbu

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் ராஜிவ் முதல் இடத்தையும், இரண்டாம் நிகழ்ச்சியில் பிரியங்காவும் பிடித்தார்கள். இதனை தொடர்ந்து தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூன்று வாரத்தை கடந்து உள்ளது. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி பின்னரே என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இருந்து கமல் வெளியேற்றம்:

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி பயங்கரமாக ஒருவரை ஒருவர் தாக்கி விளையாடி வருகிறார்கள். மேலும், நிகழ்ச்சியில் இருந்து முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார். இதனை தொடர்ந்து மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் கடந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து தொகுத்து வழங்கிய கமலஹாசன் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சிம்பு:

-விளம்பரம்-

இது குறித்து கமல்ஹாசன் அறிக்கை கூட வெளியிட்டிருந்தார். இதனால் ரசிகர்களும் போட்டியாளர்களும் பெரும் அப்சட் அடைந்து உள்ளனர். அதோடு கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும் தான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று கூறி நிகழ்ச்சியில் வெளியேறினார். இந்த நிலையில் தற்போது BB அல்டிமேட்டின் தொகுப்பாளராக சிம்பு தான் வரப்போகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் அதற்கான ப்ரோமோ எல்லாம் வெளியாகி உள்ளது. மேலும், இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனின் இந்த வார கேப்டன் தாமரை மற்றும் இந்த வார ட்ரெண்டிங் பிளேயர் பாலாஜி முருகதாஸை தவிர மீதமுள்ள 8 பெரும் நாமினேட் ஆகி இருக்கின்றனர்.

-விளம்பரம்-

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டாஸ்க்:

அதேபோல் இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நபர் ஒருவர் நுழைகிறார். சில வாரங்களுக்கு முன்பு வெளியேறிய சுரேஷ் சக்கரவர்த்தி மீண்டும் நிகழ்ச்சிகளுக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வில்லை. இந்த வாரம் angel மற்றும் demon என்ற டாஸ்க் போய் கொண்டு உள்ளது. போட்டியாளர்கள் ஒவ்வொரும் அருமையாக விளையாடி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்காக வாங்கும் சம்பளம் குறித்த தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

சிம்புவின் சம்பளம்:

நான்காம் வாரம் முதல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தான் தொகுத்து வழங்க இருக்கிறார். இதற்காக இவர் ஒரு நாளைக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என்று கூறப்படுகிறது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சிம்பு வந்ததற்கு பிறகு நிகழ்ச்சி எப்படி சூடுபிடிக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அதுமட்டுமில்லாமல் தற்போது சிம்பு அவர்கள் வெந்து தணிந்தது காடு என்ற படத்தில் நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news