Bigg Boss Tamil : என்னை வெளியே அனுப்பிடுங்க, கன்பெக்ஷன் ரூமில் கதறிய வனிதா – ரம்யா கிருஷ்ணன் தான் காரணமா ?

0
459
vanitha
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூன்று வாரத்தை கடந்து நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். கடந்த 2 சீசன்களை போல போட்டியாளர்கள் அனைவரும் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளுடன் போட்டியாளர்கள் இரண்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு தனிமைப்படத்தப்பட்ட பின்னரே பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பி பின்னரே என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர். பின் நிகழ்ச்சி தொடங்கியதிலிருந்தே போட்டியாளர்களுக்குள் வன்மம் கலவரம் தொடங்கி விட்டது. அதிலும் வனிதா ஒருவரை விடாமல் கொளுத்தி போட்டு வருகிறார். முதல் நாளில் இருந்தே வீட்டில் உள்ள அனைவரிடமும் வனிதா சண்டை போட்டு கொண்டு இருக்கிறார். பின் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் நாளே போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தார்கள்.

- Advertisement -

அல்டிமேட் நிகழ்ச்சியில் எவிக்ஷன்:

அதில் முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் சுஜா வருணி வெளியேறி இருந்தார். இதனை தொடர்ந்து நேற்று மூன்றாவது வாரம் எவிக்ஷன் நடந்தது. இதில் நேற்று அபிநய் மற்றும் சாரிக் தான் வெளியேறி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் நேற்றோடு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி இருந்தார். நேற்றோடு அவர் நிகழ்ச்சியில் இருந்து விலகி விட்டார்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கமல்:

இதற்கான அறிக்கையும் கமலஹாசன் வெளியிட்டிருந்தார். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. நிகழ்ச்சியில் கூட கமலஹாசன் நான் விடை பெற்றுக் கொள்கிறேன் என்றும் கூறியிருந்தார். இது ரசிகர்களுக்கும் போட்டியாளர்களுக்கும் வருத்தமாக இருந்தது. இதனைத்தொடர்ந்து வனிதா நான் நிகழ்ச்சிக்கு வந்ததே கமலஹாசனுக்காக மட்டும் தான். அவர் எது சொன்னாலும் நான் கேட்டுகொள்வேன். அவர் இடத்தில் வேறு யார் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றெல்லாம் பேசி இருந்தார். பின் இன்று வனிதா மிகவும் மனமுடைந்து கண்பெக்ஷன் ரூமில் பிக்பாஸ் இடம் பேசி இருக்கிறார். அப்போது அவர், என்னை வீட்டில் உள்ள எல்லோரும் டார்கெட் செய்கிறார்கள்.

-விளம்பரம்-

பிக் பாஸ்ஸிடம் அழுது புலம்பிய வனிதா:

அவர்களிடம் சண்டை போட எனக்கு விருப்பம் இல்லை. அவர்களுடன் சண்டை போட்டு நான் என்னுடைய தகுதியை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை. எல்லோருமே ஒரு பக்கமிருந்து என்னை மட்டும் டார்கெட் செய்து தாக்குற மாதிரி எனக்கு தெரிகிறது. எனக்கு இங்க இருக்க பிடிக்கவில்லை. என்னை தயவு செய்து வெளியில் அனுப்பி விடுங்கள் என்று அழுது புலம்பி இருக்கிறார் வனிதா. உடனே பிக் பாஸ், இந்த வீட்டிலேயே ரொம்ப தைரியமான, ஸ்ட்ராங்கான போட்டியாளர் என்றால் நீங்கள் தான். நீங்களே இப்படி சொன்னால் எப்படி? அதெல்லாம் ஒன்றுமில்லை போய் நீங்கள் உங்களை சமாதனம் படித்துக் கொண்டு வாருங்கள் பிறகு பேசலாம் என்று அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்.

Bigg Boss Vanitha Clash With Ramya Krishnan In BB Jodigal

அடுத்த தொகுப்பாளர் யார்:

பொதுவாகவே வனிதா போட்டியாளர்களை கண்டு பயப்படும் ஆள் கிடையாது. அதேசமயம் நேற்று நிகழ்ச்சியோடு கமலஹாசன் விலகுகிறார் என்ற தகவல் கேட்டதிலிருந்து அவருக்கு வருத்தம் ஏற்பட்டு விட்டது. அது மட்டுமில்லாமல் கமலஹாசன் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது ரம்யா கிருஷ்ணன் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். அவர் தொகுத்து வழங்கி இருந்த எபிசோடுகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதனால் இனி பிக் பாஸ் நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் தான் தொகுத்து வழங்கப் போகிறார் என்று பலரும் கூறுகிறார்கள்.

வனிதா – ரம்யா கிருஷ்ணன் சண்டை:

அது மட்டுமில்லாமல் ஏற்கனவே வனிதாவுக்கும், ரம்யா கிருஷ்ணனுக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியின் போது வாக்குவாதம் ஏற்பட்டு வனிதா நிகழ்ச்சியை விட்டே வெளியேறினார். தற்போது ரம்யா கிருஷ்ணன் தான் தொகுப்பாளராக வர வாய்ப்பிருக்கும் காரணத்தினால் தான் வனிதா இந்த மாதிரி எல்லாம் பேசுகிறாரா? இதனால் தான் இவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றுங்கள் என்று கேட்கிறாரா? என்று சோசியல் மீடியாவில் என்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள். அடுத்த வாரம் யார் தொகுப்பாளராக வரப்போகிறார்? வனிதா உண்மையாலுமே வெளியிடுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement