இரவில் குடைபிடித்துக்கொண்டு மழையில் நடந்த பாலாஜி – கேப்ரில்லா – Unseen வீடியோ இதோ. என்ன பேசியுள்ளார்கள் பாருங்க.

0
35897
balaji
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் மூன்றாவது வரத்தைக் நெருங்கி இருக்க இருக்கிறது. மூன்று வாரத்தை நிறைவு செய்ய இருக்கும் நிலையில் இதுவரை எந்த ஒரு பெரிய சுவாரசியமான நிகழ்வுகள் நடைபெறவில்லை. அடிக்கடி சுரேஷ் சக்கரவர்த்தியால் மட்டும் பிக் பாஸ் வீட்டில் கொஞ்சம் சூடு பிடிக்கிறது. அதேபோல மூன்று வாரங்கள் ஆன நிலையிலும் இதுவரை பிக் பாஸ் வீட்டில் எந்த ஒரு ரொமாண்டிக்கான காதல் கதையும் துவங்கவில்லை. இந்த சீசனில் கண்டிப்பாக பாலாஜி முருகதாசுக்கு ஒரு காதல் ஸ்டோரி துவங்கி விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களாகவே கேப்ரில்லா மற்றும் பாலாஜி முருகதாஸ் கொஞ்சம் நெருக்கமாக பேசிவருகிறார்கள். கடந்த வாரம் கூட பாலாஜி முருகதாஸ் மற்றும் கேப்ரில்லா வைத்து ஒரு ப்ரோமோ வெளியாகி இருந்தது. அதற்கு லவ் பிஜிஎம் எல்லாம் போட்டு கூட பிக்பாஸ் ஒரு பில்டப் கொடுத்து இருந்தார். ஆனால் நிகழ்ச்சியில் பார்க்கும்போது அவர்கள் இருவரும் சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டு இருந்தார்கள். ஆனால், இவர்கள் இருவருக்கும் ஏதோ இருக்கிறது என்று ரசிகர்கள் ஏற்கனவே முனுமுனுக்க தொடங்கிவிட்டார்கள்.

- Advertisement -

நேற்றைய நிகழ்ச்சியில் கூட சனம் ஷெட்டியை சிறந்த போட்டியாளர் என்று பாலாஜி முருகதாஸ் முன்மொழியும் போது கேப்ரியலா தனது கையால் ஹாட் சிம்பிளை காட்டி இருந்தார். அது பாலாஜி முருகதாஸிற்காக காட்டினாரா ?இல்லை சனம் செட்டி பெயரை பாலாஜி சொன்னதால் அவரை வெறுப்பேற்ற இப்படி காட்டினார் என்பது தெரியவில்லை. இப்படி ஒரு நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அன்சீன் வீடியோ ஒன்றில் பாலாஜி முருகதாஸ் மற்றும்கேப்ரில்லா குடை பிடித்தபடி ஒன்றாக கார்டனில் மழையில் நடந்து கொண்டு பேசி இருக்கிறார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் கண்டிப்பாக ஒரு காதல் கதை இடம் பெற்றுவிடும் முதல் சீசனில் ஓவியா -ஆரவ் இரண்டாவது சீசனில் மகத் மற்றும் யாஷிகா மூன்றாவது சீஸனில் அபிராமி – முகேன், கவின்- லாஸ்லியா, தர்ஷன்- ஷெரின் என்று பல காதல் கதைகள் ஓடியது. ஆனால் இந்த சீசன் ஆரம்பித்து மூன்று வாரங்கள் நிறைவேறிய இருக்கும் நிலையில் இன்னும் எந்தவித லவ் ஸ்டோரியும் ஆரம்பிக்காமல் இருக்கிறது. ஆனால், இதை பார்க்கும்போது கண்டிப்பாக விரைவில் ஒரு காதல் கதை ஆரம்பித்து விடும் என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement