அது அசிங்கம், நீ ஒரு Slefish – சம்யுக்தாவை வெளுத்து வாங்கியுள்ள அனிதா. வீடியோ இதோ.

0
7699
anitha
- Advertisement -

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். ரியோ, ரேகா, அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், ஜித்தன் ரமேஷ்,ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், வேல்முருகன் என்று பல பரிட்சயமான போட்டியாளர்கள் கலந்து கொண்டாலும் ஒரு சில புது முகங்கள் கூட கலந்து கொண்டு இருந்தனர்.அந்த வகையில் சம்யுக்தாவும் ஒருவர்.இன்ஜினியரிங் முடித்துவிட்டு கார்ப்பரேட்டில் பணியாற்றி இவர் மாடல் அழகியும் ஆவார். மேலும், இவர் மிஸ் சென்னை பட்டத்தை கூட ஜெயித்திருக்கிறார். மாடலிங் நடனம் போன்ற பல்வேறு விஷயங்களில் ஈர்ப்பு கொண்ட இவருக்கு 4 வயதில் ஒரு மகனும் இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் விஜய் டிவி தொகுப்பாளினியான பாவனாவின் நெருங்கிய தோழி என்பதும் குறிப்பிடத்தக்கது. சொல்லப்போனால் பாவனாவின் ரெகமெண்டேஷன் மூலமாகத்தான் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறப்படுகிறது.பிக்பாஸ் ஆரம்பித்த ஒரு சில நாட்களில் இவருக்கு என்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் சேர ஆரம்பித்தது ஆனால் கடந்த சில தினங்களாக இவரது செயல்பாட்டினால் ரசிகர்கள் இவர் மீது கொஞ்சம் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். அதற்கு முக்கிய காரணமே இவரும் ஆரி சொன்ன அந்த குரூபீசம் குட்டையில் தான் இருக்கிறார்.

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட கூட நீதிமன்ற டாஸ்கின் போது இவர் ஆரியை குற்றம்சாட்டி சில கருத்துக்களை கூறி இருந்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் இவருக்கும் ஆரிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அமைதியாக இருந்துவிட்டு பின்னர் வெளியில் வந்தவுடன் பெண்களுக்கு மரியாதை கொடுக்கத் தெரியாதவன் எல்லாம் பிக்பாஸ் இருக்கு வந்துவிட்டான் என்று ஆரியை மரியாதை குறைவாக பேசி இருந்தார். நேற்றைய நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட அன்சீன் வீடியோவில் அனிதாவிற்கு சம்யுக்தாவிற்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. அதில் சம்யுக்தா அனிதாவை ஆரியுடன் சேர்ந்து குரூப்பீசம் செய்வதாக கூறியிருந்தார். இதனால் கடுப்பான அனிதா என்னை குரூப்பீசம் என்று சொல்லாதீர்கள். நீங்கள் தான் அதை செய்கிறீர்கள் என்று கூறுகிறார்.

அதற்கு சம்யுக்தா இது என்னுடைய கருத்து நான் அப்படி தான் சொல்லுவேன் எப்போ பார்த்தாலும் நீங்கள் இருவரும் சேர்ந்து தான் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று சொன்னார். இதனால் கடுப்பான அனிதா நீங்கள்தான் குரூப்பீசம் செய்கிறீர்கள் நீங்கள் கேப்டன் ஆனது கூட அசிங்கம் என்று கூறினார் இதனால் கடுப்பான சம்யுக்தா ஏய் என்ன அசிங்கம்னு சொல்ற என்று கேட்க ஆமாம் நீ என்னை குரூப்பீசம் என்று சொன்னால் நான் இப்படித்தான் பேசுவேன் என்று கூறிவிட்டு பின்னர் சமித்தா சென்றபின்னர் செல்பிஷ் என்று கூறுகிறார். இதனால் மேலும் கடுப்பான சமித்தா இதோ பார்த்துக்கங்க இதெல்லாம் கல்ச்சர் தெரியாத பெண் பேசும் வார்த்தை என்று கூறுகிறார்.

-விளம்பரம்-
Advertisement