சுரேஷுக்கு எதிராக வேல்முருகனை கொம்பு சீவிவிடும் சனம் – Unseen வீடியோ இதோ. இன்னிக்கி செமயா இருக்கும் போல.

0
7523
vel
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வெற்றிகரமாக ஒரு வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது. கடந்த வாரம், முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் எதுவும் நடைபெறவில்லை. அதேபோல கடந்த வாரம் சுரேஷ் மற்றும் அனிதா சம்பத்தின் பிரச்சனையை தவிர எதுவும் சுவாரசியமாக நடைபெறவில்லை.இடையில் சனம் ஷெட்டி மற்றும் பாலாஜிக்கும் கொஞ்சம் மோதல் வெடித்தது. ஆனால் அது ஆரம்பித்த வேகத்திலேயே முடிந்துவிட்டது. கடந்த சில தினங்களாக சுரேஷ்தான் பிக் பாஸ் வீட்டில் ஹைலைட்டாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

நடிகர் சுரேஷ் பிக் பாஸ் வீட்டில் நுழைந்த முதல் நாளே பாலாஜி முருகதாஸிடம் ஜாதி குறித்து கேட்டார் என்று சர்ச்சை வெடித்தது. அதன் பின்னர் அனிதா சம்பத்துக்கும் இவருக்கும் கொஞ்சம் மோதல் வெடித்தது .நேற்றைய நிகழ்ச்சியில் கூட இவருக்கும் ரியோவிற்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது. அதேபோல சனம் ஷெட்டி இடம் கூட சுரேஷ் கொஞ்சம் அடிக்கடி வம்பு இழுத்து வருகிறார். இப்படி கிடைக்கிற கேப்பில் எல்லாம் சுரேஷ் ஏதாவது பிரச்சினையை கிளப்பி கொண்டு இருக்கிறார் என்று போட்டியாளர்கள் நினைத்து வருகின்றனர்.

- Advertisement -

இன்று வெளியான ப்ரோமோ ஒன்றில் கூட சுரேஷுக்கும் வேல்முருகன் ஆகும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது அதில் கடந்த வாரம வேல்முருகனுக்கு சுரேஷ் தன்னுடைய வேட்டி மற்றும் துண்டை கொடுத்து இருந்தார். அது குறித்து சுரேஷ் ஏதோ சொல்லப்போக இதனால் சுரேஷுக்கும் வேல்முருகனுக்கு சண்டை ஏற்பட்டது போல தெரிகிறது. அதேபோல இன்று வெளியான மற்றொரு ப்ரோமோவில் சுரேஷுக்கும் ரியோவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது போல தெரிகிறது.

இதனால் கடுப்பான ரியோ சோபாவில் கையால் அழுத்தி தனது கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார் இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் Unseen வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் சுரேஷ் குறித்து கோபமாக இருக்கும் வேல்முருகன் இடம் நடிகை சனம் ஷெட்டி சுரேஷ் பற்றி கூறுகிறார். இதனால் கடுப்பான வேல்முருகன் இங்கே அவருக்காகத்தான் எல்லாம் நடைபெறுகிறதா என்று மிகவும் கோபத்துடன் கூறியிருக்கிறார். இதையெல்லாம் பார்க்கும்போது கண்டிப்பாக இன்றைய நிகழ்ச்சி சுவாரசியமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இன்றைய நிகழ்ச்சியில் சுரேஷ்தான் ஹைலைட்டாக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement