இந்த அசிங்கம் தேவையா..! கமல் மற்றும் சக போட்டியாளர்களிடம் கேவலப்பட்ட போட்டியாளர்.!

0
603
Bigg-BOss
- Advertisement -

விஜய் டிவியில் தினந்தோறும் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை விட ப்ரோமோ விடியோக்கள் தான் மக்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ ஒன்றில் கமலின் கிண்டலுக்கு உள்ளாகியுள்ளார் வைஷ்ணவி.

-விளம்பரம்-

Kamal

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி வாரம் தோறும் சற்று மந்தமாக ஓடுகிறது. ஆனால், கமல் வரும் சனி மற்றும் ஞாற்றுக்கிழமை நிகழ்ச்சி மட்டும் பரபரப்பிற்கு பஞ்சமே இல்லாமல் இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோ ஒன்றில் நடிகர் கமல் இரண்டு பொம்மைகளை கையில் வைத்துக் கொண்டு போட்டியாளர்களுல் பெருமை பேசி யார், ஜால்ரா யார் என்று கேட்கிறார்.

அதில் பொன்னம்பலம், நடிகை மும்தாஜை ஜால்ரா என கூற மும்தாஜ் , வைஷ்ணவியை ஜால்ரா என்று கூறுகிறார். பொன்னம்பலம், சென்ராயன் தவிர அனைத்து போட்டியாளர்களும் வைஷ்னவியை ஜால்றா என சுட்டிக்காட்டினார்.அதற்கு அடுத்து வைஷ்னவி , கமலிடம் ‘ஜால்றா என்றால் அர்த்தம் என்ன அர்த்தம்’என்று விளக்கம் கேட்க உடனே கமல் ‘ஜிங் ஜக், ஜிங் ஜக்’ என்று கூறி வைஷ்ணவியை கிண்டல் அடிப்பது போல அந்த ப்ரோமோ வீடியோவில் தோன்றுகிறது.

-விளம்பரம்-

Viashnavi

பிக் பாஸ் வீட்டின் போட்டியாளராக பங்கேற்றுக்குள்ள வைஷ்ணவி தான் அதிகம் புறம் பேசும் நபராக இருந்து வருகிறார். இவரது புறம் பேசும் பழக்கத்தை சக போட்டியாளர்களும் பல முறை சுட்டிக்காட்டி உள்ளனர். ஆனால், ஜால்றா என்றால் என்ன என்று கமலிடம் விளக்கம் கேட்டது தான் கொஞ்சம் ஜீரணிக்க முடியாமல் இருக்கிறது.

Advertisement