இது தான் பிரச்சனைன்னு சொன்னா செருப்பால அடிப்பேன். லேட்டஸ்ட் பேட்டியில் வறுத்தெடுத்த வனிதா.

0
34000
vanitha-tharshan
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற தர்ஷன் சனம் ஷெட்டிக்கும் தர்ஷன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது ஆனால் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் தர்ஷன் ஏமாற்றி விட்டதாகவும் தன்னை பணத்திற்காகவும் சுயநலத்திற்காகவும் பயன்படுத்திக் கொண்டார் என்று சனம் ஷெட்டி குற்றம்சாட்டியிருந்தார்சனம் ஷெட்டியின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து வரும் தர்ஷன் சனம் ஷெட்டியின் முன்னாள் காதலர் குறித்தும் அவரது நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் மேலும் இவர்கள் இருவர் விவகாரத்தில் பலரும் பலவிதமான கருத்துக்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள வனிதா தர்ஷனை வறுத்தெடுத்துள்ளார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா இருந்தவரை வனிதாவின் குரல் தான் அதிகம் ஒலித்துகொண்டே இருந்தது. இவர் செய்த ஆதிக்கத்தை யாரும் தட்டிக் கேட்கவில்லை என்று ரசிகர்கள் எண்ணி வந்த நேரத்தில் தர்ஷன் ஒரு கட்டத்தில் வனிதாவை எதிர்த்து கேள்வி கேட்டதை ரசிகர்கள் அனைவரும் பாராட்டினர். அவ்வளவு ஏன் கமல் கூட தர்ஷனை பாராட்டி இருந்தார். அன்றிலிருந்து வனிதாவுக்கும்தர்ஷனுக்கும் அடிக்கடி கொட்டிக் கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் ஷெரினிடன், வனிதா ,தர்ஷனின் காதலி குறித்து கூறிவிட தர்ஷனுகும் ஷெரீனுக்கும் மிகப்பெரிய சண்டை கூட வெடித்திருந்தது.

- Advertisement -

இந்தநிலையில் இது குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள வனிதா, தர்ஷனை எனக்கு திட்ட உரிமை இருக்கிறது. அவனுடைய இமேஜை அவனே கெடுத்துக்கொண்டு வருகிறார். உண்மையில் சனம் ஷெட்டி தர்ஷன் மீது போசஸீவாக இருப்பது தான் பிரச்சனை என்று என்னிடம் சொன்னால் அவனை செருப்பால் அடிப்பேன் என்று மிகவும் ஆவேசமாக பேசியுள்ளார் வனிதா. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தர்ஷன் விஷயத்தில் வனிதா சொன்னது தான் சரி என்று பலரும் வனிதாவுக்கு ஆதரவாக பேசி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement