‘நான் உள்ள போனா அவன செருப்பால் அடிப்பேன்’ – பாலாஜி குறித்து வனிதா பேசிய வீடியோ தற்போது படு வைரல்.

0
747
vanitha
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி மூன்று வாரத்தை கடந்து நன்றாக சென்று கொண்டு இருக்கிறது. இந்தியில் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி Ottயில் ஒளிபரப்பானது. தற்போது இதே கான்சப்டில் தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் வனிதா, சினேகன், அபிராமி, சுஜா வருணி, அபிநய், அனிதா, பாலாஜி முருகதாஸ், தாடி பாலாஜி, சுருதி, தாமரை செல்வி, ஷாரிக், நிரூப், சுருதி, தாமரை, சுரேஷ் ஷாரிக், நிரூப் ஆகிய 14 பேர் கலந்து கொண்டனர்.

-விளம்பரம்-

இதில் சுரேஷ், சுஜா, ஷாரிக், அபிநய் என்று 4 பேர் வெளியேறி இருக்கின்றனர். இந்த சீசன் மிகவும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கும் போட்டியாளர்களின் மிகவும் முக்கிய போட்டியாளர்கள் பாலாஜி முருகதாஸ் மற்றும் வனிதா தான். ஆரம்பம் முதலே இவர்கள் இருவருக்கும் தான் அடிக்கடி சண்டைகள் சென்று கொண்டு இருக்கிறார். அதிலும் கடந்த சில தினங்களாக பாலாஜி மீது செம காண்டில் இருக்கிறார் வனிதா.

- Advertisement -

சனம் விவகாரத்தில் ஏற்பட்ட சர்ச்சை :

வனிதாவும் சரி, பாலாஜியும் சரி இருவரும் அவரவர் சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராக தான் இருந்து வந்தனர். அதிலும் பாலாஜி சீசன் 4ல் இருந்த போது பிக் பாஸ் சீசனை விமர்சித்து வந்தார் வனிதா. அந்த வகையில் பாலாஜி, சனம் ஷெட்டியை Adjustnent என்று வார்த்தையை பயன்படுத்தி கொச்சைபடுத்தினார் என்று சர்ச்சைகள் கூட எழுந்தது. பாலாஜி குறித்து சனம் எழுதிய கடிதம் அப்போது ப்ரோமோவில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

பாலாஜி கொடுத்த விளக்கம் :

இதனால் பாலாஜியை வெளியில் அனுப்ப வேண்டும் என்றும் பல கண்டனங்கள் எழுந்தது. ஆனால், இதுகுறித்து இந்த சீசனில் விளக்கமளித்த பாலாஜி, நிறைய பேர் pageant என்ற பெயரில் காசு வாங்கிட்டு ஏமாத்தறாங்க, அதை தான் நான் சொன்னேன். அப்போது அவர் என்னிடம் 2 மணி நேரம் என்ன விஷயம் என்று சொல்லுங்கள் என்று கேட்டார். நான் தான் பாவப்பட்டு ஒரு காரணம் சொன்னேன். நான் பெண்களுக்காக தான் பேசினேன்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-15-853x1024.jpg

பாலாஜி பற்றி கொச்சையாக பேசிய வனிதா :

ஆனால், அட்ஜெஸ்ட்மென்ட் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாக மாற்றி காண்பித்துவிட்டார்கள் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பாலாஜி பிக் பாஸ் சீசன் 4ல் பங்கேற்ற போது இந்த விவகாரம் குறித்து தன்னுடைய பிக் பாஸ் reviewல் பேசிய வனிதாவின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில் பேசியுள்ள வனிதா ‘அவன் எப்படி ஒரு பெண்ணை குறித்து அப்படி ஒரு வார்த்தையை சொல்லுவான். அவனுக்கு என்ன தைரியம். அவனுடைய அம்மா பற்றியே அவன் அப்படி சொன்னவன் தானே. அவன் பிறப்பில் எதோ தவறு இருக்கிறது. அதான் அப்படி பேசுகிறான்.

உள்ளே சென்றால் அவனை செருப்பால் அடிப்பேன் :

நான் உள்ளே சென்றால் அவனை செருப்பால் அடித்து விடுவேன் ஒரு நபரை பற்றி அவர் செய்யும் விஷயங்களைப் பற்றி சொல்லலாம் இல்லை அவரைப்பற்றி கருத்துக்களைச் சொல்லலாம் ஆனால் வாய்ப்புக்காக அவர் அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொண்டார் என்று சொல்ல அவன் யார் இவனும் அப்படி செய்து தான் மிஸ்டர் இந்தியா பட்டத்தை வென்றால் இது போன்ற ஆட்களுக்கு எல்லாம் கற்பழிப்பில் ஈடுபடும் நபருக்கு கொடுக்கும் தண்டனையை கொடுக்க வேண்டும் என்று பேசி இருக்கிறார்.

Advertisement