அவர் Inncocentனு ஒத்துக்குறேன், ஆனா அவர் Ignorant கிடையாது, இல்லனா இது பண்ண முடியாது – Gp முத்து குறித்து வனிதா.

0
511
vanitha
- Advertisement -

ஜி பி முத்து குறித்து வனிதா விஜயகுமார் அளித்திருக்கும் பேட்டி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி ஐந்து நாட்கள் ஆகி விட்டது. இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து, அசீம், அசல் கொலார், ராபர்ட், ஷெரினா, ராமசாமி, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன், ஆயிஷா, தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி சாந்தி, விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி என 20 பேர் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இந்த முறை நிகழ்ச்சியை ஒரே நேரத்தில் டிவியிலும், ஓடிடியிலும் ஒளிபரப்பாகி வருகிறது. வழக்கம் போல் கமல் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருக்கிறார். இந்த முறையும் பலர் புது முகங்களாக இருக்கின்றனர். மேலும், நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்குள் டாஸ்க் கொடுக்கப்பட்டது. முதல் நாளிலேயே பிக் பாஸ் கொடுத்த டாஸ்கில் நான்கு பேர் இந்த வார நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

இப்படி ஆரம்பமே அமர்க்களமாக ஆரம்பித்ததால் போட்டியாளர்கள் மத்தியில் முதல் நாளே சர்ச்சை தொடங்கியது. அதுமட்டும் இல்லாமல் இந்த முறை கேப்டன் தேர்வும் நடைபெறவில்லை. வீட்டில் உள்ள போட்டியாளர்களை நான்கு அணிகளாக பிரித்து வேலைகள் பிரித்து செய்து வருகின்றனர். இதனால் போட்டியாளர்களுக்குள் சலசலப்பு தொடங்கி இருக்கிறது. பொதுவாகவே நிகழ்ச்சி தொடங்கி சில வாரங்கள் கழித்து தான் போட்டியாளர்களுக்கு ஆர்மி துவங்கம்.

ஜிபி முத்து குறித்த தகவல்:

ஆனால், இந்த முறை நிகழ்ச்சி தொடங்கிய முதல் இரண்டு நாட்களிலேயே போட்டியாளர்களுக்கு ஆர்மி தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ரசிகர்கள் ஜிபி முத்துக்கு ஆர்மியை துவங்கி இருக்கிறார்கள். இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களிலேயே அதிகமான ரசிகர்களை கொண்டவர் ஜி பி முத்து தான். டிக் டாக், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ், youtube என வீடியோ தளங்களில் எந்த பக்கம் சென்றாலும் ஜிபி முத்துவின் வீடியோவை பார்க்க முடியும்.

-விளம்பரம்-

வனிதா அளித்த பேட்டி:

இதனால் ஒட்டுமொத்த பிக்பாஸ் ரசிகர்கள் கண்ணும் ஜிபி முத்து மீது தான் இருக்கிறது. அதிலும் இவர் நெல்லை தமிழில் தன்னை கிண்டல் செய்யும் நபர்களை திட்டக்கூடிய வார்த்தைகளும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கும் விதமாக இருக்கிறது. இவருக்கு தற்போது ஆர்மி தொடங்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ஜிபி முத்து குறித்து வனிதா அளித்திருக்கும் பேட்டி வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, வீடியோவில் வனிதா கூறி இருப்பது, ஜிபி முத்துவை பத்தி எனக்கு பெரிதாக தெரியாது. அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். பவர் ஸ்டார் உடன் ஒரு படம் பண்ணும் போது அந்த படத்தில் அவரும் இருந்தார்.

ஜிபி முத்து குறித்து வனிதா சொன்னது:

ஆனால், அவரை நேரில் பார்த்து பேசியது கிடையாது. அவர் எனக்கு போன் செய்து வனிதா அக்கா என்று பேசினார். அந்த அளவிற்கு தான் எனக்கு தெரியும். உண்மையாலுமே அவர் ஒரு குடும்பஸ்தன், நல்ல கணவர், நல்ல தகப்பன் என்று தான் சொல்லணும். அவருடைய மனைவிக்கு என்ன பிரச்சனை? என்று எனக்கு தெரியாது. இருந்தும் அவர் குடும்பத்தை நேசிக்கிறார். உண்மையாலுமே அவர் ஒரு இன்னசென்ட் . மற்றவர்களை சிரிக்க வைக்க ஒரு அறிவு வேணும். அவர் இன்னசென்ட் தான் ஆனால், ignorant(அறியாமை) கிடையாது அவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தன்னுடைய தனிப்பட்ட முயற்சியில் அவர் இந்த அளவிற்கு முன்னேறி வந்திருக்கிறார். அதற்காகவே அவரை பாராட்ட வேண்டும். ஒரு காமெடியனாக மக்களை சிரிக்க வைப்பது என்பது பெரிய விஷயம். அதற்கு அறிவு வேணும். அதை ஜி பி முத்து செய்வதற்கு பாராட்டுக்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement