‘2 நாள் முன்னாடி தான் பேசுனேன் இந்த படத்தோட வெற்றிக்காக பார்க்காமலேயே போய்விட்டார் – திடீர் மரணம்நடைந்த தன் படத்தின் இயக்குனர் குறித்து வனிதா உருக்கம்.

0
533
vanitha
- Advertisement -

பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ மேனனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருந்தவர் தான் மணி நாகராஜ். அதன் பிறகு மணி நாகராஜ் தன் திறைமையினால் ஜிவி பிரகாஷ்சை முதல் முறையாக திரையில் காட்டி அறிமுகப்படுத்தினார் ஸ்ரீதிவ்யாவை மற்றும் பல திரைப பிரபலங்கள நடித்து 2016 ஆம் ஆண்டு வெளியான படம் தான் பென்சில். என்னதான் வணிக ரீதியாக இந்த படம் தோல்வியை சந்தித்தாலும் மக்களிடையே நல்ல விமர்சனங்களையும், வரவேற்பையும் பெற்றிருந்தது மணி நாகராஜ் தன் முதல் படத்திலேயே ரசிகரின் கைதட்டுகளை வாங்கி குவித்தார்.

-விளம்பரம்-

வாசுவின் கர்பிணிகள் :-

அதன்பின் சினிமாவில் பட வாய்ப்புகளே தேடி அலைந்து கொண்டிருந்த மணி நாகராஜ் மலையாளத்தில் வெற்றியடைந்த டைமண்ட் நெக்லஸ் படத்தின் தமிழ் ரீமிக்ஸ் உரிமையும் பெற்றிருந்தார். இன்னும் சில படங்களின் தமீழ் ரீமேக் உரிமையும் பெற்றிருந்தார். அதன் பின் 6 வருடங்கள் கழித்து தற்போது மணி நாகராஜ் வாசுவின் கர்ப்பிணிகள் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார் மேலும் நீயா நானா கோபிநாத், அனிகா, வனிதா விஜயகுமார், அனிதா, சீதா போன்ற முன்னணி கதாபாத்திரங்களை நடித்து படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்ட வேலைபாடுகள் செய்து கொண்டிருந்தார் மணி நாகராஜ்.

- Advertisement -

இயக்குனர் மணி நாகராஜ் மரணம் :-

இந்நிலையில் சினிமா பிரபலங்கள் பலர் இளம் வயதிலேயே மறைந்து கொண்டு வருகிறது பலர் மனதில் மிகுந்த மன வேதனையை அழித்து வந்தது. இப்போது இந்த வரிசையில் பென்சில் பட இயக்குனர் மணி நாகராஜ்ம் இளம் வயதிலேயே மரணம் அடைந்து விட்டார். இயக்குனர் மணி நாகராஜ் இழப்பை அவர் குடும்பத்தினரும் திரையுலகினரும் எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என்று தெரியவில்லை. மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக செய்திகள் வந்துள்ளது இருந்தாலும் மணி நாகராஜ் மறைவு குறிந்து தெளிவான செய்திகள் இன்னும் வெளிவரவில்லை.

இரங்கல் தெரிவித்த ஜிவி.பிரகாஷ் :-

தற்போது மணி நாகராஜன் மறைவு திரையுலகிலும் அனைவருக்கும் அதிர்ச்சியில் ஆழ்தியுள்ளதாக இருக்கிறது அவருடைய ஆன்மா சாந்தியடைய வேண்டுமென ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் மணி நாகராஜ் இயக்கத்தில் பென்சில் படத்தில் நடித்த ஜிவி பிரகாஷ் ” எனது நண்பரும் இயக்குனருமான மணி நாகராஜ் இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.

-விளம்பரம்-

கலங்கிய வனிதா :

அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று இசை அமைப்பாளர் ஜிவி.பிரகாஷ் டூவீட்டரில் பதிவு ஒன்று போட்டு இருந்தார். மேலும், தன் இயக்குனரின் இறப்பு குறித்து பதிவிட்டுள்ள வனிதா ”வார்த்தைகளில் சொல்ல முடியாத அதிர்ச்சி… இளம் டைனமிக் இயக்குனர்.2 நாட்களுக்கு முன்பு அவருடன் நான் பேசி இருந்தேன் .

வெற்றியை பார்க்காமலேயே போய்விட்டார் :

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளை முடித்துவிட்டு, விரைவில் திரையரங்குகளில் 1வது பிரதியை வெளியிடகாத்துகொண்டு இருக்கிறது. அவர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படத்தின் வெற்றியைக் காண்பதற்கு முன்பே கடவுள் அவரை வெகு சீக்கிரமாக அழைத்துச் சென்றுவிட்டார் என்ன சொல்வது என்று தெரியவில்லை என்று மிக உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார்.

Advertisement