பிரதீப் Loserகளின் Ambassador, கவின் கண்டிப்பா இத பண்ணுவான் – பிரதீப் விஷயத்தில் கவினை இழுத்த வனிதா

0
194
Vanitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் தற்போது மூன்று வாரத்தை நிறைவு செய்து நான்காவது வாரத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.முதல் வாரமே நிகழ்ச்சி விறுவிறுப்பாகவும் கலவரமாகவும் சென்றிருந்தது. முதல் வாரம் எவிக்சன் நடக்காது என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல் வாரத்திலேயே அனன்யா வெளியேறி இருந்தார்.பின் பவா, தன்னால் இனி நிகழ்ச்சியில் விளையாட முடியாது என்று தாமாகவே வெளியேறிவிட்டார். தற்போது 16 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.

-விளம்பரம்-

நேற்றய நிகழ்ச்சியில் Ranking Task நடைபெற்றது..இதில் பிக் பாஸில் தங்கள் தகுதியை அடிப்படையாக வைத்து ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுக்கு தகுதியான இடத்திற்கு விவாதிக்க வேண்டும் என்பதே டாஸ்க். இந்த டாஸ்கின் போது முதல் இடத்திற்காக பிரதீப் மற்றும் ஜோவிகாவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது பிரதீப், நீ மிடில் கிளாஸ் என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறாய்.

- Advertisement -

எந்த ஒரு மிடில் கிளாசும் இவ்ளோ ஷூ, இவ்வளவு ஆடை வைத்து நான் பார்த்தது இல்லை என்று பேசினார். இதற்கு பதில் அளித்த ஜோவிகா, பிக் பாஸில் நான் ஆடும் கேமிற்கும் நான் போடும் ஷுவிற்கும் என்ன சம்மந்தம் என்று கேட்டார். பின்னர் ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்கு வாதம் நீள, பிரதீப் ஜோவிகாவை நாயே என்று சொல்லிவிட்டார். இதனால் நான் வார்த்தையை விட்டுவிட்டேன் அதனால் நான் கடைசி இடத்திற்கு சென்றுவிடுகிறேன் என்று கூறினார்.

நேற்றய நிகழ்ச்சியில் இவர்கள் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி ஒரு நிலையில் தனது மகளுக்காக ஆதரவு கொடுத்துள்ள வனிதா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ ‘ஜோவிகாவின் அம்மா தனது மகளை வளர்ப்பதற்காகக் கஷ்டப்படுகிறார். ஆனால், இந்த வயதில் பணம் சம்பாதிக்க துப்பில்லாமல் அதற்காக இந்த சமூகத்தை குறை சொல்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும் பிரதீப்?

-விளம்பரம்-

தனது தோல்வியை சொல்லி சொல்லியே இந்த நிகழ்ச்சியில் வெற்றிப் பெறலாம் என பிரதீப் நினைக்கிறார். இது முற்றிலும் தவறான விவாதம் பிரதீப். ஏழையால் சட்டை, செருப்பு வாங்க முடியாது, அதனால் நடிகனாக வேண்டும். அதனால் படம் தயாரிக்க பணம் தேவை. ஒரு நடிகருக்கு திறமை தேவை, வாய்ப்புகளை பெற இயக்குனர்களை சந்திக்க வேண்டும்’  என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். க

மேலும், லூசர்களின் தூதுவர் தான் இந்த பிரதீப். மேலும், ட்விட்டர்வாசி ஒருவர்’ ஜோவிகா, Nepo kid என்றால் பிரதீப் கவினின் Nepo friend தானே என்று பதிவிட்டு இருந்தார். இதற்க்கு பதில் அளித்த வனிதா ‘ வின் தனது சிறப்பான திறமை மூலம் ஒரு வெற்றிகரமான ஹீரோவாக இருந்த வருகிறார். கண்டிப்பாக பிரதிபிற்கு கவின் வாய்ப்பு வாங்கி கொடுப்பார். ஒரு படம் தயாரிக்க அவருக்கு பணம் தேவையில்லை. இந்த போட்டி பணத்தை வெல்வது அல்ல, யார் பிக் பாஸ் படத்தை வெல்வது என்பது தான் என்றும் கூறியுள்ளார் வனிதா.

Advertisement