‘நீ ஏதுக்குடா வந்த’ – அஸீமிற்கு ஆதரவாக பேசி விக்ரமனை வெளுத்து வாங்கிய வனிதா.

0
431
vanitha
- Advertisement -

விக்ரமனை தாக்கி வனிதா பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி தற்போது 50 நாட்களை கடந்து இருக்கிறது. இந்த முறை நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு செல்ல பிக் பாஸ் பல மாற்றங்களை செய்து இருக்கிறது. இதனால் நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே போட்டியாளர்களுக்கு டாஸ்க் கொடுக்கப்பட்டு சண்டை தொடங்கி இருக்கிறது.

-விளம்பரம்-

இதுவரை இந்த நிகழ்ச்சியில் இருந்து ஜி.பி.முத்து, மெட்டிஒலி சாந்தி, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் ஆகியோர் வெளியேறி இருக்கிறார்கள். 21 போட்டியாளர்களில் இருந்து 7 போட்டியாளர்கள் போக தற்போது 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் விளையாடி வருகின்றனர். இந்த வாரம் பழங்குடியினர் மற்றும் ஏலியன் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. கடந்த சீசனில் இந்த டாஸ்கின் போது போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான சண்டைகள் ஏற்பட்டிருந்தது.

- Advertisement -

பிக் பாஸ் சீசன் 6:

தற்போது அதை தான் பிக் பாஸ் எதிர்பார்த்து இந்த முறை கொடுத்து இருக்கிறார். பழங்குடியினரிடம் இருக்கும் செல்வத்தை ஏலியன்கள் திருட வேண்டும். ஏலியன்கள், பழங்குடியினரை எப்படி வேண்டுமானாலும் கோபப்படுத்தலாம் என்று பிக் பாஸ் கூறி இருக்கிறார். இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டதிலிருந்து போட்டியாளர்கள் மத்தியில் கடுமையான வாக்குவாதம் சென்று கொண்டிருக்கின்றது. இது ஒரு பக்கம் இருக்க, இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் இருந்து விக்ரமன்- அசீம் இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்து வருகிறார்கள்.

விக்ரமன்- அசீம்:

இருவருக்குமே சுத்தமாக செட்டே ஆகவில்லை. ஏதாவது ஒரு பிரச்சனையில் இருவரும் மாறி மாறி வாக்குவாதம் செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் நடந்த டாஸ்குக்கு பிறகு விக்ரமன், அசிமை பார்த்து பிரபலத்துக்காக ஏதாவது ஒரு சர்ச்சையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று பேசியிருந்தார். உடனே அசீம் , நீங்கள் அந்த பிரபலமாக இருக்கும் நபரை தாக்கி பேசினால் நீங்கள் பிரபலமாக ஆகிவிடலாம் என்று நினைக்கிறீர்கள் சொல்கிறார்.

-விளம்பரம்-

விக்ரமன்- அசீம் சண்டை:

பின் விக்ரமன், நீ ஒரு அட்டகத்தி என்பதை நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் என்று கூறினார். இப்படி இவர்கள் இருவரும் மாத்தி மாத்தி விவாதம் செய்திருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து வனிதா கூறி இருப்பது, அசீம் ஒரு நடிகன். அவன் பிரபலத்துக்காக தான் பிக்பாஸிற்கு வந்திருக்கிறான் என்று தெரியும். நீ ஒரு அரசியல்வாதி, நேர்மையானவன், மக்கள் நலத்துக்காக போராடுபவன் என்றால் நீ எதற்கு பிக் பாஸ் வீட்டிற்கு வந்தாய்.

விகர்மனை தாக்கிய வனிதா :

நீ வெளியில் இருந்து சாதிக்கலாம் அல்லவா? நீயும் ஆடிஷன் சென்று பிரபலத்துக்காக தானே பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருக்கிறாய். மற்றவர்களை பிரபலத்திற்காக செய்கிறார்கள் என்று நினைத்தால் நீ செய்வது என்ன? அசீம் தவறு செய்கிறான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால், அவன் செய்த தவறையே கேமரா முன்பும், பிற போட்டியாளர்கள் முன்பும் அடிக்கடி சொல்லிக் காண்பித்து நீ நல்லவனாக நினைப்பது சரியா? என்று விக்ரமனை தாக்கி வனிதா பேசியிருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement