Bigg Boss Tamil : விக்ரம் படம்லா காரணம் இல்ல, நானும் கமல் சாரும் வெளியேறிய இந்த விஷயம் தான் காரணம் – வனிதா கிளப்பிய புதிய சர்ச்சை.

0
753
vanitha
- Advertisement -

தமிழில் புது வித்தியாசமான முயற்சியில் விஜய் டிவி அறிமுகப்படுத்திய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நான்காம் வாரத்தை நெருங்கி உள்ளது. இந்த நிகழ்ச்சி தமிழில் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி டிவி ஷோ போல் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பி வருகிறார்கள். இதில் பிக் பாஸ் சீசன் 1முதல் 5 வரையிலான போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், முதலில் சுரேஷ் சக்கரவர்த்தி எலிமினேட் ஆகி இருக்கிறார். அதனை தொடர்ந்து இரண்டாம் வாரத்திற்கான எவிக்ஷனில் சுஜா வருணி வெளியேறி இருந்தார். இதனை தொடர்ந்து மூன்றாவது வாரம் அபிநய் மற்றும் ஷாரிக் வெளியேறி இருந்தார்கள்.

-விளம்பரம்-

மேலும், கடந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலிருந்து கமலஹாசன் பட சூட்டிங் நேரம் ஒதுக்க முடியாத காரணத்தினால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இது குறித்து கமல்ஹாசன் அறிக்கை கூட வெளியிட்டிருந்தார். இதனால் ரசிகர்களும் போட்டியாளர்களும் பெரும் அப்சட் அடைந்து உள்ளனர். அதோடு கமல் வெளியேறியதை தொடர்ந்து வனிதாவும் தான் இந்த நிகழ்ச்சியில் தொடர விரும்பவில்லை என்று கூறி நான் நிகழ்ச்சிக்கு வந்ததே கமலஹாசனுக்காக தான். அவர் எது சொன்னாலும் நான் கேட்டுகொள்வேன். அவர் இடத்தில் வேறு யார் வந்து சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றெல்லாம் பேசி இருந்தார்.

- Advertisement -

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய வனிதா:

பின் வனிதா பிக் பாஸ் வீட்டை விட்டு தாமாகவே வெளியேறினார். இந்நிலையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு வனிதா பேட்டி ஒன்றை கொடுத்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, எல்லோரும் நான் வெளியே வந்ததை சரி என்று தான் சொல்கிறார்கள். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கேம் தப்பான டிராக்கில் போய்க்கொண்டிருக்கிறது. என்னை யாரும் ஏன் இப்படி செய்தாய் என்று சொல்லவில்லை. நீ செய்தது சரி தான் என்று என்னை பாராட்டினார்கள். என்னுடைய நண்பர்கள், என்னுடன் நெருக்கமாக உள்ளவர்கள் என எல்லோருமே அதை தான் சொன்னார்கள்.

வனிதா அளித்த பேட்டி:

உண்மையை சொல்லப்போனால், வனிதாவிற்கு சண்டையே பிடிக்காது. எனக்கு நெருக்கமானவர்கள் எல்லோருக்குமே தெரியும். ஆனால், சண்டை போட்டு பிரச்சனை ஆகிறது என்பதனால் தான் நான் அந்த இடத்தில் இருக்க வேண்டாம் என்று கிளம்பி விடுவேன். பொதுவாகவே எனக்கு சண்டை போடுவது பிடிக்காது. அதனால் தான் நான் பிரச்சனைகள் அதிகமாகும் அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுவேன். அது குடும்பமாக இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி எனக்கு பிடிக்கவில்லை என்றால் வெளியேறி விடுவேன். அது யாருடைய கட்டாயத்தினாலே, விருப்பத்தினாலோ இருக்காது.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டில் இது தான் நடக்குது:

அதே போல் இரண்டு வாரங்களாகவே எனக்கு ஏதோ ஒரு மாதிரியாக இருக்கிற மாதிரி தோன்றியது. கமல் சார் வந்து கேள்வி கேட்காமல் நீங்க பண்ணுவது தான் சரி என்று சொல்வது போல நடந்துகொண்டார். எனக்கும், ஒரு வேளை என்னை வெளியே நல்லவளாக காண்பிக்கிறார்களோ, இல்லை நான் செய்வது தான் சரி என்று சொல்கிறார்களோ என்று என் மனதுக்குள் தோன்றுகின்றது. நிகழ்ச்சியிலிருந்து கமலஹாசன் வெளியேறுவதற்கு முன் கூட பாலாஜியிடம் பேசும்போது அவன் அக்கா ஏதோ வேற மாதிரி நடக்கிறது என்று தான் அவனும் சொன்னான். பின் உடனே கமலஹாசன் சார் வெளியே போனது எல்லோருக்குமே ஷாக்காக இருந்தது. உண்மையை சொல்லப்போனால் இன்னும் இருக்கிறதே மூன்று ,நான்கு வாரம்தான். அதில் வந்தால் அவர் 4 நாளைக்கு தான் ஷூட்டிங் ஒதுக்க போறாரு.

கமல் வெளியேறியதற்கு இது தான் காரணம்:

இத்தனைக்கும் அவர் நடிக்கிற படம் அவருடைய சொந்த தயாரிப்பில் எடுக்கிற படம். இந்த நாலு நாள் அவரால் ஒதுக்க முடியாதா? ஆனால், அவர் நான் இந்த நிகழ்ச்சியில் இல்லை, நான் பிக்பாஸ் 6ல் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிட்டார். அவருக்கே இந்த நிகழ்ச்சி தப்பா போகிறது என்று தெரிகிறது. அதனால் தான் அவர் இந்த நிகழ்ச்சியை விட்டு விலகினார். அதே போல் வீட்டில் நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது இது சரியில்லை ஏதோ வேற மாதிரி கொண்டு செல்கிறார்கள் என்றெல்லாம் சொன்னார்கள். எனக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது, அதோடு ரொம்ப மன அழுத்தத்தில் இருந்தேன். அதனால் தான் நான் வெளியே வந்துவிட்டேன். இந்த நிகழ்ச்சி கொண்டு செல்கிற விதமே சரியில்லை என்று பல விஷயங்களை வனிதா பகிர்ந்து இருக்கிறார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement