மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று – வனிதாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் இது.

0
3840
vanitha

கடந்த சில நாட்களாகவே வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திதான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டும் விவாகரத்தில் முடிந்து விட்டது. அதை அடுத்து வனிதா பிரபல நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் காரணம் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது.

வனிதாவிற்கு ஏற்கனவே ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கும் நிலையில் தனியாக வாழ்ந்து வந்த வனிதா, சமீபத்தில் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார். ஆனால், இது முறைப்படி திருமணம் இல்லை காதலின் கொண்டாட்டமா என்பதை தெளிவாக கூறாமல் வனிதா ரசிகர்களை குழப்பி கொண்டுதான் வருகிறார். அதற்கு காரணம் பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறது.

- Advertisement -

வனிதா மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ள பீட்டர் பவுலும் சினிமா துறையில் பணிபுரிபவர் தான். இவருக்கு பல ஆண்டுகளுக்கு முன்னரே திருமணமாகி இரண்டு குழந்தைகளும் இருக்கும் நிலையில் தான் வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். ஆனால், முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதால் பீட்டரின் மனைவி எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

View this post on Instagram

More kisses for the unromantics

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

வனிதா மற்றும் எலிசபெத்தின் பஞ்சாயத்து தான் கடந்த சில நாட்களாக வைரலாக செய்தியாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே வனிதா திருமணத்திற்குப் பின்னர் தனது கணவருக்கு முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். இப்படி ஒரு நிலையில் தனது மகளுக்கு முன்னால் தனது காதல் கணவர் தனக்கு முத்தமிடும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள வனிதா ‘மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று’ என தங்க மீன்கள் படத்தில் வரும் பாடல் வரிகளையும் பதிவிட்டுள்ளார். ஆனால், இதை பார்த்து கண்டிப்பாக ரசிகர்கள் சிலர் கழுவி ஊற்றுவார்கள் என்று கமென்ட் பகுதியை ஆப் செய்து இருக்கிறார் வனிதா.

-விளம்பரம்-
Advertisement