கவினால் மைக்கை கழட்டி எரிந்து பிக் பாஸிடம் வாக்கு வாதம் செய்யும் வனிதா.!

0
4067
Vanitha
- Advertisement -

கடந்த சில வாரமாக சுவாரஸ்யம் இல்லாமல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்று வனிதாவால் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் வீட்டுக்குள் ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் அனைவரையும் சீண்டிவிட்டு அவர்களுக்கு சண்டை மூட்டி விட்டு வேடிக்கை பார்த்து வருகிறார். மேலும் கடந்த சில நாட்களாகவே கவினை டார்கெட் செய்து வருகிறார் வனிதா

-விளம்பரம்-

நேற்று வாரத்தின் முதல் நாள் என்பதால் இந்த வாரத்திற்கான நாமினேஷன் நடைபெற்றது. அதிலும் இந்த சீசனில் இரண்டாவது முறையாக ஓப்பன் நாமினேஷன் நடைபெற்றது. அதில் கவின், முகேன், லாஸ்லியா, சேரன், ஷெரின் ஆகியோர் இந்தவார நாமினேஷன் இடம்பெற்றிருந்தனர்.

இதையும் பாருங்க : கவினை வச்சி செய்த வனிதா.! விடியோவை பாத்துட்டு உங்கள் ஆதரவு யாருக்குனு சொல்லுங்க.! 

- Advertisement -

மேலும் நேற்றைய நிகழ்ச்சியில் கவின், ஷெரின் மற்றும் சேரனைநாமினேட் செய்திருந்தார். ஆனால், அதற்கு கவின் கூறியிருந்த காரணம் வனிதாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் வனிதா மற்றும் கவின் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. கவினை குறை கூறியதால் கடுப்பான கவினின் தோழி வனிதா வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதனால் நேற்றைய எபிசொட் கொஞ்சம் கார சாரமாக ஓடியது. இந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டிற்குள் இரண்டு முன்னாள் போட்டியாளர்கள் நுழைய போகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. அது அபிராமி மற்றும் சாக்க்ஷியாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement