மீண்டும் வனிதாவை வாத்து என்று குறிப்பிட்ட கஸ்தூரி.! கடுப்பாகி வனிதா போட்ட பதிவு.! முற்றும் மோதல்.!

0
23706
kasturi-vanitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி இடையில் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது நிலையில் கஸ்தூரி வைல்டு கார்டு போட்டியாளராக கலந்து கொண்டு பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் . இதனால் இதில் பல்வேறு கலவரங்கள் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவரையும் வனிதா தூக்கி சாப்பிட்டு இருந்தார்.

-விளம்பரம்-
Image result for vanitha kasthuri

கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து போது வனிதாவை வாத்து வனிதா என்று குறிப்பிட்டு விட்டார் என்று வணிதாவிற்கும் இவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டு இருந்தது. ஆனால், அதன் பின்னர் இருவரும் இதை பற்றி பேசி சமாதானம் ஆகினர்.

- Advertisement -

சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேறியதை குறித்து வனிதா ட்விட்டரில் ட்வீட் செய்திருந்தார்.மேலும், இந்த வாரம் தனது ஆதரவு லாஸ்லியாவிற்கு என்றும் பதிவிட்டிருந்தார் வனிதா. இதே சமயத்தில் கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு இருந்தார். தற்போது அது தான் பிரச்சனையாக வெடித்துள்ளது.

கஸ்தூரி பதிவிட்ட அந்த பதவிவில், என்னதான் லாஸ்லியா வயசு கோளாறினால் தவறுகள் செய்தாலும் அதற்காக அந்த சின்ன வயது பெண் மீது இப்படியெல்லாமா அபாண்டமாக பழி போடுவது? விட்டுருங்கம்மா ! என்று பதிவிட்டதோடு அதன் அருகில் ஒரு வாத்து எமோஜி ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

கஸ்தூரி வாத்து என்று வனிதாவை தான் குறிப்பிடுகிறார் என்று ரசிகர் ஒருவர் கஸ்தூரி போட்ட அந்த பதிவை வனிதாவிற்கு டேக் செய்திருந்தார். அதை கண்டு கடுப்பான வனிதா, அனைவரும் உனக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று என்னிடம் கேட்கிறார்கள். ஆனால், உன்னை குறிப்பிட இணையத்தில் கூட எமோஜி கிடையாது என்று பதிவிட்டுள்ளார்.

வனிதாவின் இந்த பதிவிற்கு பதிலடி கொடுத்துள்ள கஸ்தூரி, இணையத்தில் கூட நீங்கள் பேசும் வார்த்தைகளுக்கு அர்த்தம் இருக்காது. நமது வார்த்தை யுத்தத்தை நீங்கள் வெறுமையான இடம் கொடுத்ததற்கு நன்றி என்று நக்கலாக குறிப்பிட்டுள்ளார். இதனால் இருவருக்கும் ட்விட்டரில் மோதல் ஏற்பட்டுள்ளது.

Advertisement