லைவ் பேட்டியில் அசிங்கமாக பேசிய வனிதாவுக்கு ட்விட்டரில் பதிலடி கொடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்.

0
8779
vanitha
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் தற்போது சரியான ஒரு விஷயமாக பேசப்பட்டு வருகிறது வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட மோதல்தான் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது அதிலும் நேற்று லைவ் பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணனை வாடி போடி என்று தகாத வார்த்தையில் திட்டி தீர்த்து இருந்தார் வனிதா.

-விளம்பரம்-

இந்த நிலையில் இவர்கள் இருவரின் சண்டை ட்விட்டரிலும் தொடர்கிறது. சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ட்வீட் செய்துள்ளார். அதில், இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை லட்சுமிராமகிருஷ்ணன். இதற்கு மேல் நீங்கள் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையீட்டால். உங்களின் உண்மையான முகத்தினை நான் ஆதாரத்துடன் வெளியிட்டு விடுவேன் என்று ட்வீட் செய்திருக்கிறார். மேலும், என்னுடைய நிழலில் வாழ்ந்து நீங்கள் பிரபலத்தை தேடிக் கொள்ளாதீர்கள் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

வனிதாவின் இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள லட்சுமி ராமகிருஷ்ணன், உனக்கு திருமணம், உறவு போன்றவை எல்லாம் என்னவென்று தெரியுமா? அதற்கு அதற்கான ஸ்பெல்லிங் ஆவது தெரியுமா ? எனக்கு 36 வருடங்களாக கணவராக இருக்கும் டாக்டர் ராமகிருஷ்ணனை பற்றி பேச உனக்கு என்ன அவ்வளவு தைரியம் ? கணவரை, உடையை மாற்றுவது போல அடிக்கடி மாற்றிக் கொண்டிருக்கும் உனக்கெல்லாம் எங்கே புரியப் போகிறது என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

மேலும் மற்றுமொரு பதிவில் நீயெல்லாம் எப்படி உனது குழந்தைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கப் போகிறாய்? கணவன் மனைவி உறவு என்றால் என்ன என்று உனது குழந்தைகளுக்கு எப்படி சொல்லிக் கொடுக்கப் போகிறாய் ? உன்னைப் போன்றே மற்றவர்கள் இருப்பார்கள் என்று நினைக்காதே எங்களுடைய சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டோம். உன்னை போன்ற நபர்கள் என்னை தவறாக பேசுவதால் எனக்கு ஒன்றும் ஆகப் போவதில்லை என்று பதிவிட்டிருக்கிறார்

-விளம்பரம்-
Advertisement