திருமணத்திற்கு முன்பே வனிதாவும் – பீட்டரும் செய்த வேலையை பாருங்க – அவ்வளவு லவ்வா.

0
8700
vanitha
- Advertisement -

பிக் பாஸ் வனிதாவுக்கும் பீட்டர் பவுல் என்பவருக்கும் திருமணம் என்ற செய்தி தான் கடந்த சில நாட்களாக வனிதாவின் ரசிகர்களால் மிகவும் பரவலாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்து வருகிறது. பிரபல ஸ்டார் தம்பதிகளாக விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதா, விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் இவர் நடித்தாலும் இவருக்கும் மிகப்பெரிய புகழ் கிடைத்தது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

-விளம்பரம்-
View this post on Instagram

Etched for love

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாக வனிதாவின் குடும்ப பிரச்சனை அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான், மேலும், வனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டுமே விவாகரத்தில் முடிந்துவிட்டது. மேலும் இவருக்கு இரண்டுபெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கிறது .

- Advertisement -

இந்த நிலையில் வனிதா, பீட்டர் பவுல் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள போகிறார் என்ற செய்தியை வனிதா உறுதி செய்து இருந்தார்,. இந்த நிலையில் தனது திருமணம் குறித்து நேற்று வனிதா தனது யூடுயூப் சேனலில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தனது வருங்கால கணவர் பீட்டர் பவுல் குறித்தும் தனது திருமண திட்டங்கள் குறித்தும் பேசி இருந்தார் வனிதா.

அதிலும் குறிப்பாக தனது திருமணத்தை ஏன் ஜூன் 27 ஆம் தேதி வைத்தேன் என்பதற்கான ஒரு சுவாரசியமான தகவலையும் தெரிவித்துள்ளார் வனிதா. அதாவது ஜூன் 27 ஆம் தேதி தான் இவரது அம்மாவின் திருமண நாளாம், தனது அம்மாவை நினைத்து திருமணம் குறித்து யோசித்த போது இவருக்கு இந்த தேதி தோன்றியதாம் உடனே இந்த தேதியை பீட்டரிடம் கூறியதாகவும் சொல்லியுள்ளார் வனிதா.

-விளம்பரம்-

மேலும், கொரோனா பிரச்சனை காரணமாக இவர்களது திருமணம் மிக எளிமையாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் வனிதாவின் பெயரை ரீச்சர்டும், ரிச்சர்ட் பெயரை வனிதாவும் டாட்டூவாக குத்திக்கொண்டு உள்ளனர். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வனிதா.

Advertisement