யூடியூபில் எருமாட்டுக்கும் காட்டு பன்னிக்கும் கல்யாணம்னு காமிச்சா- வனிதாவுக்கு ரவீந்தரன் வாட்ஸ்சப்பில் அனுப்பிய மெசேஜ்.

0
53698
- Advertisement -

கடந்த சில நாட்களாகவே வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திதான் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் அனிதாவிற்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி அது இரண்டும் விவாகரத்தில் முடிந்து விட்டது. அதை அடுத்து வனிதா பிரபல நடன இயக்குனரான ராபர்ட் மாஸ்டரை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வெளியான நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள் காரணம் அவருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்தது.

-விளம்பரம்-

My replies for all her voice message to me..On behindwoods, galatta and little talks links having the voice threaten…

Ravindar Chandrasekaran ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಭಾನುವಾರ, ಜುಲೈ 5, 2020

மேலும், பீட்டரின் முதல் மனைவி எலிசபத் வட பழனி காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார். ஆரம்பத்தில் தனது திருமணம் குறித்து அறிவித்த போது பெரும்பாலான நபர்கள் வனிதாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். ஆனால், வனிதா திருமணம் செய்து கொள்ளும் நபருக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகவில்லை என்று தெரிந்ததும். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பலவிதமான விமர்சனங்கள் வந்தன . அவ்வளவு ஏன் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் குட்டி பத்மினி போன்றவர்கள் கூட வனிதாவுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால் வழக்கம்போல அவர்களையும் திட்டி தீர்த்து வனிதா ட்வீட் செய்து இருந்ததால் அவர்கள் இருவருமே மன்னிப்பு கேட்டு விட்டார்.

- Advertisement -

இந்த நிலையில் கவின் நடித்த நட்புனா என்ன தெரியுமா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன், வனிதா மற்றும் பீட்டரின் திருமணம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறிய கருத்தின் சுருக்கம் என்னவென்றால் வனிதா யாரை திருமணம் செய்து கொள்கிறார் எந்த முறையில் திருமணம் செய்து கொள்கிறார் என்பது என்னுடைய கேள்வி கிடையாது. நானும் வனிதாவின் தீவிர ரசிகர் தான். ஆனால், ஒரு நபருக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் விவாகரத்து பெறாமல் அந்த நபர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வது என்பது சட்டரீதியாக தவறு. அதை நான் ஒருபோதும் ஆதரிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

Tribute to vathikuchi…Purinjavan pisthu..* Not Applicable to all the women

Ravindar Chandrasekaran ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಜುಲೈ 6, 2020

மேலும், வனிதா தனக்கு அனுப்பிய சில வாய்ஸ் மெசேஜ்களையும் காட்டினார் ரவீந்திரன். இதையடுத்து ரவீந்திரன் அடுத்தடுத்து பேட்டிகளில் பங்கேற்று வனிதாவை வறுத்தெடுத்து வருகிறார். மேலும், ரவீந்திரன், வனிதாவிற்கு அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்ஜில், நான் ஒன்றும் பிரபலத்திற்காக இதை செய்யவில்லை, யூடியூபில் ஒரு எருமை மாட்டிற்கு காட்டு பணிக்கும் திருமணம் என்று காண்பித்தால் கூட அதனை நிறைய பேர் பார்ப்பார்கள் ஆனால் அதை வைத்துக்கொண்டு அந்த எருமை மாடும் மனையும் ஒன்னும் செய்ய முடியாது என்று வனிதாவிற்கே பதிலடி கொடுத்துள்ளார்

-விளம்பரம்-
Advertisement