நீயும் நானும் ஒன்னு – அருண் விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து பல்ப் வாங்கிய வனிதா.

0
2619
Vanitha-arunvijay
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான் ரசிகர்கள் மத்தியில் பேராதரவைப் பெற்றது. அதற்கு முக்கிய காரணமே இந்த சீசனில் நடந்தேறிய பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் தான். அதற்கு முழு முதல் காரணமாக இருந்து வந்தார் நடிகை வனிதா. விஜய்யின் ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் அறிமுகமான வனிதா தமிழ் சினிமாவில் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மூத்த மகள் என்பது பலரும் அறிந்த ஒரு விஷயம்தான்.

-விளம்பரம்-

வணிதாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. வனிதாவின் தாயார் மஞ்சுளா இறந்த பிறகு வனிதாவை குடும்பத்தினர் வனிதாவும் சுத்தமாக தங்களது குடும்பத்தில் சேர்ப்பது கிடையாது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாக விஜயகுமார் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டில் வசித்து வந்தார் வனிதா. ஆனால், அந்த வீட்டை காலி செய்ய வேண்டும் என்று விஜயகுமார் கூறியதும், வனிதா பெரும் பிரச்சினையை செய்திருந்தார். அந்த செய்தி சமூகத்தில் பரவலாக பரவி வந்தது. இதனால் வனிதாவின் சகோதரர்களான அருண்விஜய், ப்ரீதா, ஸ்ரீதேவி, அனிதா, கவிதா என்று அனைவருமே வனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள்.

- Advertisement -

இதனால் இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்ட வனிதா சமீபத்தில் அவருடன் இருந்தும் பிரிந்தார். அருண் விஜய் தனது சகோதரிகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். ஆனால், அதில் வனிதா இல்லாததை கண்டு வணிதாவிற்காக ரசிகர்கள் மிகவும் வருத்தப்பட்டனர்.

இருப்பினும் வனிதா தன்னுடைய சகோதர சகோதரிகளே எப்போதும் மறக்காமல் தான் இருந்து வருகிறார் அந்த வகையில் அனைத்து வருடமும் அருண் விஜய் பிறந்த நாள் தவறாமல் சமூக வலைதளத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து விடுவார். படைத்தான் அந்த வகையில் நேற்று(நவம்பர் 19) அருண் விஜய் தனது பிறந்த நாளை கொண்டாடினர். இதற்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார் வனிதா, ஆனால் கடந்த ஆண்டைப் போல இந்த ஆண்டும் வனிதாவின் வாழ்த்துக்கு எந்த ஒரு பதிலும் கொடுக்காமல் அனிதாவை அசிங்கப்படுத்தி இருக்கிறார் அருண் விஜய்.

-விளம்பரம்-

Advertisement