பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மகன் – கண்டுகொள்ளாத பீட்டர் பவுல் மற்றும் வனிதா. வெளியான ஸ்க்ரீன் ஷாட்.

0
38416
peter-paul
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. ஏற்கனவே 2 முறை திருமணமான வனிதா தற்போது ஏற்கனவே திருமணமான பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், பீட்டர் பவுல் தனது முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல் வனிதா திருமணம் செய்து கொண்டதால் இந்த திருமணமும் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

-விளம்பரம்-

பீட்டர் பவுல் மீது ஏற்கனவே பீட்டர் பவுலின் முதல் மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்த பிரச்சினை ஒரு புறம் சென்று கொண்டிருக்க, வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமண பிரச்சனையில் பல்வேறு பிரபலங்களும் தங்களது கருத்தை தெரிவித்து வந்தனர். அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து விஷயத்தில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

- Advertisement -

அது மட்டுமல்லாமல் எலிசபெத் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்து வருகிறார் ரவீந்திரன். சமீபத்தில் கூட பீட்டர் பவுலின் கல்லூரி கட்டணத்தை கூட ரவீந்திரன் தான் கட்டியிருந்தார். இப்படி ஒரு நிலையில் நேற்று பீட்டர் பவுல் தனது பிறந்தநாளை வனிதா குடும்பத்தினருடன் கொண்டாடினார். இந்த நிலையில் பீட்டர் பவுல் மகன் ஜான், தனது தந்தைக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்து சொல்லுமாறு ரவீந்திரனுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.

https://www.facebook.com/photo?fbid=10216807308357170&set=pcb.10216807348718179

ஜான் அனுப்பிய மெசேஜை வனிதாவுக்கு அனுப்பியுள்ள ரவிந்திரன் தன் பங்கிற்கு பீட்டர் பவுலுக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளார். ஆனால், இன்று வரை அதற்கு எந்த பதிலும் வராததால் ஜான் அனுப்பிய மெசேஜ், அதை வனிதாவுக்கு அனுப்பிய ஸ்க்ரீடன் ஷாட்டை வெளியிட்டுள்ள ரவீந்திரன், இதுகுறித்து வீடியோ ஒன்றையும் வெளியிடுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement