நைட் பார்ட்டியில் செம்ம குத்தாட்டம் போட்ட வனிதா, யார் இருக்காங்கன்னு நீங்களே பாருங்க – வைரலாகும் புகைப்படம்

0
662
vanitha
- Advertisement -

இரவு பார்ட்டியில் நடிகர்களுடன் ஆட்டம், பாட்டம் என்று வனிதா கொண்டாடி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் மிக பிரபலமான நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். திருமணத்துக்கு பின்னர் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனித்தனியாக வசித்து வருகிறார் வனிதா.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதா:

மேலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.

வனிதா நடிக்கும் படங்கள்:

இருந்தும், இவரைக் குறித்து பல சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன. தற்போது இவர் காத்து என்ற படத்திற்கு நடனம் ஆடி இருக்கிறார். இதனை தொடர்ந்து நடிகை வனிதா அவர்கள் அனல்காற்று, அந்த கண், சிவப்பு மனிதர்கள், கொடூரன், தில்லிருந்தா போராடு, பிக் கப் டிராப் உட்பட பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் முடிவடைந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டு இருந்தார்.

-விளம்பரம்-

வனிதா செய்யும் வேலைகள்:

மேலும், இவர் நடிப்பைத் தாண்டி யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். இதில் இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். இதுமட்டுமில்லாமல் இவர் அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யும் அங்காடி ஒன்றை கடந்த ஆண்டு தொடங்கினார். இப்படி வனிதா அவர்கள் பல்வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வருகிறார். சொல்லப்போனால், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வனிதா வாழ்க்கையே மாறிவிட்டது என்று சொல்லலாம்.

இரவு பார்ட்டியில் வனிதா:

இந்நிலையில் இரவு பார்ட்டியில் வனிதா கலந்து இருக்கும் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே வனிதா அவர்கள் இரவு பார்ட்டி நடத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் வனிதா பிரபலங்களுக்கு இரவு பார்ட்டி ஏற்பாடு செய்திருக்கிறார். அதில் ஆட்டம், பாட்டம் என வனிதா செம ஜாலியாக இருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது சோசியல் மீடியாவில் புகைப்படங்களையும் பதிவிட்டு இருக்கிறார். அதில் காமெடி நடிகர் ரோபோ சங்கர், விஜய் டிவி பிரபலம் பிரஜின் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள்.

Advertisement