எல்லாம் டிகிரியை வாங்கி வச்சிகிட்டாங்க – வனிதாவை பற்றி போன வருசமே கூறியுள்ள முன்னாள் கணவர். வீடியோ இதோ.

0
9033
vanitha

கடந்த சில தினங்களாகவே வனிதா மற்றும் பீட்டாகரோடின் திருமண விஷயம் தான் சமூக இணையதளம் முழுக்க நிரம்பி வழிகிறது. வனிதா கடந்த சில நாட்களாக பேட்டி கொடுக்கவில்லை என்றாலும் அவரை பற்றிய செய்திகள் சமூக வளைதளத்தில் வைரலாகி கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் தற்போது வனிதா என்ன படித்துள்ளார் என்பதை வனிதாவின் 2வது கணவர் கடந்த ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்

இரண்டாம் கணவர் ராஜனுடன் வனிதா

வனிதா முதலில் கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் வேறு யாருமில்லை சமுத்திரம் படத்தில் சரத்குமாரின் தங்கை கணவராக நடித்திருப்பாரா அவர் தான். நடிகர் ஆகாஷ் தமிழில் சொக்கத்தங்கம், தாமிரபரணி,தில் என்று ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள்.

- Advertisement -

நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர் தனது மகளை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ். அதன் பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.ராஜன் ஆனந்தன் திருமணம் செய்து கொண்ட பின்னர் இந்த தம்பதியருக்கு ஜெயனிதா என்ற மகளும் பிறந்தார்.ராஜன் ஆனந்துடன் 3 ஆண்டுகள் வாழ்ந்த அனிதா பின்னர் அவரையும் விவாகரத்து செய்து விட்டார்.

வீடியோவில் 2 : 30 நிமிடத்தில் பார்க்கவும்

வனிதா வீட்டில் இருந்த போது தனது மகளை கடத்தி வந்து விட்டதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அப்போது பேட்டி அளித்துள்ள ஆனந்த் ராஜன், வனிதாவின் ஒட்டுமொத்த குடும்பமே படிப்பறிவு இல்லாதவர் தான். வனிதா எட்டாவது கூட படிக்கல, ஸ்ரீதேவி ஐந்தாவது கூட படிக்கல, ப்ரீத்தா படிக்கல என்று கூறியுள்ளார். தற்போது பேட்டிகளில் இங்கிலிஷ்ஷில் தஸ்சு புஸ்சுனு பேசும் வனிதா வெறும் 8ஆம் வகுப்பு படிக்கல என்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement