ஹீரோவா இருந்து என்ன பிரயோஜனம். வெளுத்து வாங்கிய வனிதா. வைரலாகும் வீடியோ.

0
44376
Vanitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வணிதாவிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு இருந்தது. இதனால் வனிதாவின் சகோதரர்களான அருண்விஜய், ப்ரீதா, ஸ்ரீதேவி, அனிதா, கவிதா என்று அனைவருமே வனிதாவிடம் பேசுவதை நிறுத்தி விட்டார்கள். இதனால் இரண்டு திருமணம் ஆன பின்னரும் வனிதா தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடிகர் அருண் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார் அதற்கு வாழ்த்து தெரிவித்த வனிதா கருத்து வேறுபாடுகளை சில சமயங்களில் தீர்த்துக் கொள்ளலாம். ஒரு வாழ்க்கை, ஒரு குடும்பம், ஒரே ரத்தம். நீங்களும், நானும் ஒன்றாகத் தான் நமது வாழ்க்கையைத் தொடங்கினோம். நமது குடும்பத்தை நாம் பெருமையடைச் செய்ய வேண்டும். நமக்குள் இருக்கும் ஒற்றுமை தான் நம்மை வித்தியாசப்படுத்தி காட்டுகிறது பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களுக்கு பிடிக்கிறதோ, இல்லையோ ஐ லவ் யூ என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

ஆனால், இதற்கு அருண் விஜய் ஒரு ரியாக்ஷனையும் கொடுக்கவில்லை. ஆனால், தனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதனால் வனிதாவுக்கு ரசிகர்கள் ஆறுதல் தெரிவித்துவந்தனர். சமீபத்தில் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள வனிதா பேசுகையில் நான் செய்த தவறை எண்ணி எனது குடும்பத்தார் அனைவருக்கும் ஒரேவிதமான கடிதம் எழுதி அதனை ஈமெயில் செய்தேன். ஆனால், அதற்காக எனக்கு எந்த பதிலும் யாரிடமும் இருந்தும் வரவில்லை. என் அம்மா இருந்த வரை நான் என் குடும்பத்தாருடன் தொடர்பில் தான் இருந்தேன். ஆனால் என் அம்மா இறந்த பிறகு என் உடன் பிறந்த சகோதரர் மற்றும் சகோதரிகள் கூட என்னை கண்டுகொள்வது இல்லை.

இதையும் பாருங்க : கடை திறப்பிற்கு ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் சென்ற ரம்யா பாண்டியன். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

நான் என் தவறை எண்ணி மன்னிப்பு கேட்டும் அவர்கள் என்னை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என் அப்பா விஜயகுமார் சரி என் சகோதரரான அருண் விஜய்யும் சரி ஹீரோவாக இருந்து என்ன பிரயோஜனம் எத்தனையோ பேர் என்னை உங்கள் குடும்பத்தில் சேர்த்துக்கொள்ள கூறுகிறார்கள். இதனால் அவர்கள் உங்களை எப்படி கழுவி ஓட்டுகிறார்கள் என்பதும் நான் கண்டிருக்கிறேன். இப்போதும் நான் ஒரு தனியாக தைரியமான பெண்ணாக தான் இருந்து வருகிறேன். மேலும், நான் இப்போதும் வனிதா விஜயகுமார் தான் என் மகளும் விஜயகுமார் குடும்பத்தை சேர்ந்தவர்தான் என்பதை பெருமையாக சொல்வேன் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

மேலும், இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வனிதா ஒரு உண்மையான ஹீரோ தனது சொந்த சகோதரியை ஏமாற்ற மாட்டார் காயப்படுத்தும் மாட்டார். நான் தொடர்ந்து உங்களாலும் எனது சகோதரிகளும் ஒதுக்கப்பட்டு வருகிறேன். இந்த பிரச்சினையை தீர்க்க உங்களுக்கு போதுமான அளவு முதிர்ச்சியும் இருக்கிறது நான் சமமாக பார்க்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன் என்னை காயப்படுத்துவதும் என் குழந்தையை காயப்படுத்துவதையும் நிறுத்திக்கொள்ளுங்கள் என்று அருண் விஜய்யை மறைமுகமாக தாக்கி உள்ளார் வனிதா.

-விளம்பரம்-

மற்றொரு ட்வீட்டில் ஒரு ஆண் மகனாக இருந்து நின்று பிரச்சினைகளை முடியுங்கள் உங்கள் ரசிகர்கள் உங்களை ஒரு முன்னோடியாக பார்க்கிறார்கள். அவர்களுக்கு ஒரு தவறான எடுத்துக்காட்டாக மாறி விடாதீர்கள். யாரும் இங்கே நல்லவர்கள் கிடையாது, அனைவருமே தவறு செய்தவர்கள் தான். இறுதியில் நாம் அனைவருமே யாரையும் சாராமல் குழந்தைகளை நேசிக்கும் ஒரு நபர்கள்தான் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் .வனிதா வனிதா பின் இந்த ட்வீட் மற்றும் வீடியோவை கண்டாவது வனிதாவை அருண்விஜய் தங்களது குடும்பத்தில் ஏற்றுக்கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement