கஸ்தூரி, ரவீந்தரன், சூர்யா என்று அனைவரையும் ஒரே பேட்டியில் கிழித்து தொங்கவிட்ட வனிதா.

0
8205
vanitha
- Advertisement -

பிக்பாஸ் வனிதா மற்றும் பீட்டர் அவளின் திருமண விஷயம் தான் கடந்த சில வாரமாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. கடந்த மாதம் வனிதா, பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்து இருந்தார் பின்னர் பீட்டர் பவுலின் முதல் மனைவி அளித்த புகாரை அடுத்து, தான் செய்தது திருமணமே இல்லை என்றும் அது அன்பின் கொண்டாட்டம் என்றும் விரைவில் சட்டபூர்வமாக தங்களது திருமணம் நடைபெறும் என்றும் அறிவித்திருந்தார் வனிதா.

-விளம்பரம்-

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் சமூக வளைதளத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ரசிகர்களை தாண்டி வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக தயாரிப்பாளர் ரவீந்திரன் தொடர்ந்து வனிதா குறித்து பேட்டி அளித்து வருகிறார். அதேபோல தேவி என்பவர் தனது யூடியூப் சேனலில் தினமும் வனிதாவை திட்டி தீர்த்து வீடியோவை பதிவிட்டு வருகிறார் சமீபத்தில் கூட நடிகை கஸ்தூரி, வனிதா குறித்து பேட்டி அளித்து இருந்தார்.

இதையும் பாருங்க : இத தவிர உன்கிட்ட வேற எந்த உள்ளாடையும் இல்லையா ?ஷிவானி வெளியிட்ட புகைப்படத்தை கேலி செய்யும் ரசிகர்கள்.

- Advertisement -

சமீபத்தில் தயாரிப்பாளர் ரவீந்திரன், வனிதாவின் மகள்களை தான் பார்த்துக் கொள்வதாகவும். அவர்களுக்கு திருமணத்தை கூட நடத்தி வைப்பதாக கூறி இருந்தார். மேலும், கஸ்தூரியோபிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சிகரெட் பிடித்தார், கெட்ட வார்த்தைகளில் பேசினார் என்றும் குற்றம் சாட்டி இருந்தார். மற்றொரு புறமோ சூர்யா தேவி தொடர்ந்து வனிதாவை திட்டித் தீர்த்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.

வீடியோவில் 19 நிமிடத்தில் பார்க்கவும்

இந்த ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள வனிதா தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக தயாரிப்பாளர் ரவீந்திரன், கஸ்தூரி, சூர்யா தேவி போன்றவர்களை குப்பை என்றும் நாய்கள் என்றும் தன்னை பற்றி பேசினால் செருப்பால் அடிப்பேன் என்றும் கண்டமேனிக்கு வெளுத்து வாங்கியிருக்கிறார் வனிதா. மேலும், என்னைப் பற்றி பேசியவர்கள் அனைவர் மீதும் நான் புகார் கொடுத்திருக்கிறேன் அவர்கள் மீது கண்டிப்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement