தர்ஷனுக்கு ஏகப்பட்ட கள்ளத் தொடர்பு இருந்தது. அதான் நீ – அட்வைஸ் செய்த சனம் ஷெட்டியை அசிங்கப்படுத்திய வனிதா.

0
10620
sanam
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் தற்போது பெரும் சர்ச்சையான ஒரு விஷயமாக பேசப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் சமீபத்தில் தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் ஷெட்டி வனிதாவுக்கு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தர்ஷன் செய்தது தவறு என்றால் இந்த விஷயத்தில் நீங்கள் செய்ததும் தவறு தான். கள்ள தொடர்பை நியாயப் படுத்த வேண்டாம் என்றும் அந்த வீடியோவில் கூறியிருந்தார் சனம் ஷெட்டி.

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட பேட்டி ஒன்றில் பங்கேற்ற சனம் ஷெட்டியிடம் வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமணவிஷயம் குறித்து கேட்கப்பட்டது. ஆனால், அப்போது பதிலளித்த சனம் செட்டி, வனிதாவை எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தான் தெரியும். அவருடன் நான் அவ்வப்போது பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், அந்த விவகாரம் குறித்து தான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியிருந்தார்.

- Advertisement -

ஆனால், நாளுக்கு நாள் அதிகரிக்கும் வனிதாவின் அட்ராசிட்டியால் தற்போது சனம் ஷெட்டியே வனிதாவுக்கு அட்வைஸ் செய்யும் அளவிற்கு ஆகிவிட்டது. இப்படி ஒரு நிலையில் வனிதாவிற்கு சனம் ஷெட்டி ட்வீட் ஒன்றை செய்திருந்தார். அதில்,நான் மாற்றப்பட்டபோது நீங்கள் எனக்கு ஆதரவாக இருந்தீர்கள். அதற்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ஆனால், திருமணத்தை தாண்டி ஒரு ஆண் எத்தனை கள்ள உறவு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம் என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

தயவுசெய்து இதுபோன்ற விஷயங்களை அளிக்காதீர்கள் #ஆண்கள்ஒன்றும்கடவுள்கிடையாது #நீங்கள்தவறு தான் என்றும் குறிப்பிட்டிருந்தார் சனம் செட்டி. சனம் ஷெட்டியின் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்த வனிதா, உன்னுடைய காதலர் நிறைய கள்ளத்தொடர்பை வைத்துக் கொண்டு உன்னை ஏமாற்றினார். ஆனால், என்னுடையவர் அப்படி கிடையாது. ஏழு வருடம் ஒருவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருபவர் சட்டரீதியாக விவாகரத்து பெறவில்லை என்பதால் அவருக்கு கள்ள தொடர்பு இருக்கிறது என்பது அர்த்தமில்லை. இருப்பினும் உன்னுடைய வழக்கிற்கு நன்றி உன்னுடைய வழக்கில் நீ அவனிடம் இருந்து மீண்டும் பணத்தை கேட்டிருக்கிறாய். மேலும், உனக்கு கணவர் வேண்டாம் பணம் தான் வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement