‘ஹா, வேண்டாம்’ – ராபர்ட் ரஷிதா சாப்பாட்டு சண்டை. ரஷிதாபோல நடித்து காட்டி பங்கம் பண்ண வனிதா. வீடியோ இதோ.

0
500
racitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சியமான சில முகங்கள் கலந்துகொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் ராபர்ட் மாஸ்டர் ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு முகம் தான். ராபர்ட் மாஸ்டரை பற்றி வெளியில் தெரிவதற்கு அதிக காரணமாக இருந்தது வனிதாவின் விஷயத்தில் தான். இருவரும் காதலித்து வந்த நிலையில் வனிதாவின் பெயரை கூட தன் கையில் டாட்டூவாக குத்தி இருந்தார் ராபர்ட் மாஸ்டர். தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். மேலும், நிகழ்ச்சி தொடக்கத்திலிருந்து ராபர்ட் மாஸ்டருக்கு ரக்ஷிதாவின் மீது ஒரு கண் வைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

காதலுக்கு வயது இல்லை என்று சொல்லி கொண்டு அவர் செய்யும் சேட்டைகளுக்கு அளவே இல்லை. இவர், எனக்கு கேர்ள் பிரென்ட் இல்லை. அதனால் நம்முடைய இந்த நட்பு வெளியில் போயும் தொடர வேண்டும் என்றெல்லாம் ரக்ஷிதாவிடம் கூறியிருந்தார்.அதற்கு ரக்ஷிதா, நம்ம உள்ள வந்து சில நாட்கள் தானே ஆகிறது. பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு சூதனமாக தப்பித்து விட்டார். பின் ரக்ஷிதா என்ன செய்தாலுமே அதை மாஸ்டர் பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கிறார்.

- Advertisement -

ரக்ஷிதா எங்கு சென்றாலும் அவர் பின்னே தொடர்கிறார். ஆனால், ரக்ஷிதா அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய விளையாட்டில் கவனம் செலுத்தி வருகிறார்.ரக்ஷிதா சாதம் வடித்து கொண்டிருக்கும் போது அந்த கஞ்சி தண்ணீரில் இருந்து புகை வெளியே வந்தது. உடனே, ராபர்ட் மாஸ்டர் கையில் தடுத்து நான் உன்னை காப்பாற்றுகிறேன் என்று கூறியிருந்தார். இதை சிவன் பார்த்துவிட்டு என்ன மாஸ்டர் பண்றீங்க? என்றெல்லாம் கிண்டல் செய்திருந்தார்.

இப்படி ரக்ஷிதாவையே சுற்றி சுற்றி ராபர்ட் மாஸ்டர் வட்டமிடம் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதே போல ராபர்ட் மாஸ்டர் சாப்பிட கேட்ட போது ரக்ஷிதா, கஞ்சி சாப்புடுறீங்களா என்று சொன்னதால் ராபர்ட் மாஸ்டர் கோபித்து கொண்டார். இதனால் ரக்ஷிதாவும் ராபர்ட் மாஸ்டரிடம் செல்லாமாக கோபித்து கொன்டு அவர் என்னை அப்படி சொல்லிவிட்டார் அதனால் நான் சாப்பிடமாட்டேன் என்று கூறி இருந்தார்.

-விளம்பரம்-

பின்னர் ராபர்ட் மாஸ்டர் வந்து சமாதானம் செய்ய ‘ஏன் இப்படி குழந்தை மாதிரி பண்றீங்க இனிமே இப்படி எல்லாம் பண்ண மாட்டேன் என்று சத்தியம் பண்ணுங்க’ என்று ராபர்ட் மாஸ்டரிடம் செல்லமாக நடந்து கொண்டார் ரக்ஷிதா. இப்படி ஒரு நிலையில் இவர்கள் இருவரும் நடந்துகொண்ட விதம் குறித்து சமீபத்தில் பேசி இருக்கும் வனிதா ரக்ஷிதா போலவே நடித்து காட்டி ‘ ஹாஹா, இல்ல நான் சாப்பிட மாட்டேன்னு சொல்றாங்க’ நான் உண்மையாக கேட்கிறேன் ஒருத்தர் வந்து ஏன் சாப்பிடமாட்டியா என்று கேட்டால்’ சாப்பிட முடியாது இதுக்கு நான் சாப்பிட வேண்டும். நீ யார் என்ன கேட்க என்று இப்படித்தான் பேசுவார்கள்.

அதை விட்டுவிட்டு ஹாஹா வேண்டாம் அதெல்லாம் முடியாது என்று நடிப்பிற்கு நடிப்பா இருக்கிறது. ஆனாலும், அந்த பெண்ணை நான் பாராட்டுகிறேன். அவன் ஆரம்பத்தில் இருந்து அந்த பெண்ணிற்கு பிட்டை போட்டான். ஆனால், கடைசியில் நான் வேறொருத்தரை காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டான். இதையெல்லாம் பார்க்கும் போது எரிச்சலாக தானே இருக்கிறது. வெளியிலிருந்து பார்க்கும் போது இது எல்லாம் தவறான விஷயம் போலத்தான் இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

Advertisement