வனிதா மீது புகார் அளித்த பிரபல நடிகை. இது தான் காரணமாம்.

By Rajkumar · 28/7/2020

வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் தான். கடந்த சில வாரங்களாகவே சமூக வளைதளத்தில் ஒரு சர்ச்சையான விஷயமாக பேசப்பட்டு வருகிறது. வனிதாவின் திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்தாலும், லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வனிதா தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்த பின்னர் தான் இந்த விவகாரம் சமூக வளைதளத்தில் மேலும் வைரல் ஆனது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

https://www.instagram.com/p/CC1eFvrjLNo/

ஆரம்பத்தில் மற்ற பிரபலங்களை போல லட்சுமி ராமகிருஷ்ணனும் வனிதாவின் திருமணம் குறித்து தனது கருத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து பீட்டர் பவுலின் மனைவி பங்கேற்ற பேட்டி ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணன் பங்கேற்றபோது வனிதா மற்றும் பீட்டர் பால் அளித்த பேட்டியை கண்டு தலையில் அடித்துக் கொண்டார். இதனால் கடுப்பான வனிதா,, லட்சுமி ராமகிருஷ்ணனை தகாத வார்த்தைகளில் திட்டி தீர்த்து இருந்தார்.

இதையும் பாருங்க : குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்கிய நிலத்திற்கு ஆப்பு - நயன்தாரா தலையில் துண்டை போட்ட கட்டுமான நிறுவனம்.

இப்படி ஒரு நிலையில் லட்சுமி ராமகிருஷ்ணனும் அவரது கணவர் ராமகிருஷ்ணனும் வனிதா மீது புகார் அளித்திருக்கிறார்கள். மேலும் அந்த புகாரில் நகல் ஒன்றையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார் நாஞ்சில் விஜயன். அந்த புகாரில், Nian Media Pvt Ltd நிறுவனத்திற்கு சொந்தமான யூடியூப் சேனல் ஏற்பாடு செய்திருந்த ஸ்கைப் நேர்காணலின்போது வனிதா விஜயகுமார் என்னையும் எனது கணவரையும் அனாகரிக வார்த்தைகளால் தாக்கிப் பேசி இருந்தார்.

என்னுடன் பேச வேண்டும் என்று வனிதா விஜயகுமார் தான் அந்த சேனலை தொடர்புகொண்டு ஏற்பாடு செய்யும்படி கேட்டு இருக்கிறார். ஆனால், நேர்காணலில் வேண்டும் என்று தவறாக பேசினார். பின்னர் அது ஒளிபரப்பும் செய்யப்பட்டு இருந்தது. அதை தொடர்ந்து நானும் எனது கணவரும் எங்களது வழக்கறிஞர் மூலமாக வனிதா விஜயகுமார் குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

behindtalkies AMP · Quick view
View full