குறைந்த விலையில் கிடைக்கிறது என்று வாங்கிய நிலத்திற்கு ஆப்பு – நயன்தாரா தலையில் துண்டை போட்ட கட்டுமான நிறுவனம்.

0
1529
nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் என்று பல மொழிகளிலும் கலக்கி கொண்டு வருகிறார். இந்த நிலையில் ஹைதராபாத், பெங்களூருவில் பல கோடி மதிப்புள்ள வீட்டுமனைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்கிறோம் என பிரம்மாண்டமாக விளம்பரம் செய்த ஆதித்யா நில விற்பனை நிறுவனத்திடம் பல கோடிக்கு நிலத்தை வாங்கி தற்போது தலையில் துண்டை போட்டுள்ளார் நயன்தாரா.

-விளம்பரம்-
Nayanthara Reveals Her Biggest Regret

நயன்தாரா மட்டுமல்ல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மனைவி, நடிகை ரம்யாகிருஷ்ணன் என்று பலர் இதே நிறுனத்தில் நிலத்தை வாங்கி தற்போது ஏமாந்துள்ளனர். ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஆதித்யா நில விற்பனை நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து ஒரு ஏக்கர் நிலத்தை 5 லட்சம் ரூபாய்க்கு வாங்கி ரு ஏக்கர் நிலத்தை 1 கோடி ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- Advertisement -

வி.ஐ.பிக்கள் வாங்கியுள்ள நிலத்தில் கட்டுமானம் செய்ய முடியாது. ஏனென்றால், அவை நீர்நிலை புறம்போக்கு என்று தற்போது அம்பலமாகியுள்ளது. ஹைதராபாத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அந்த சர்ச்சைக்குரிய நிலம், சுமார் 3000 ஏக்கர் சாகுபடிக்குத் தேவையான மழைநீர் பிடித்து வைக்கும் ஆதாரம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

anushka shetty 24 | DreamPirates

படங்களில் போல்ட்டான கதாபாத்திரத்தில் கலக்கும் நயன் இப்படி நிஜ வாழ்க்கையில் க்ளீன் போல்டாக ஆகி இருப்பது கொஞ்சம் ஆச்சரியமாக தான் இருக்கிறது. அதே போல இந்த சிக்கலில் சிக்கியுள்ள ரம்யாகிருஷ்ணன் சமீபத்தில் தான் பாண்டிச்சேரியில் இருந்து காரில் மது பாட்டிலை கொண்டுவந்தார் என்று சர்ச்சையில் சிக்கினார். இது ராஜ மாதாவின் வேறு கதை. அதை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்க.

-விளம்பரம்-
Advertisement