வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டுள்ள பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே எலிசபெத் என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் மகளும் இருக்கிறார்கள். ஆனால்முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுக்காமல் பீட்டர், வனிதாவை திருமணம் செய்து கொண்டதுதான் பெரும் பிரச்சினையாக வெடித்ததுஇந்த விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் அவர்களை எல்லாம் திட்டி தீர்த்து வந்தார் வனிதா.
https://www.instagram.com/p/CC1eFvrjLNo/
மேலும் பலரும் பீட்டர் ஏன் இன்னும் பேட்டி கொடுக்கவில்லை என்று கேட்டதற்கு தனது சேனலில் பீட்டரை பேட்டி எடுத்து அதனை வீடியோவாக வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் பீட்டரின் மனைவி எலிசபெத் பேட்டி ஒன்றில் பங்கேற்ற போது லட்சுமிராமகிருஷ்ணன் வீடியோ சேட்டிங்கில் தொடர்புகொண்டு உதவி கேட்டிருந்தார். அந்த வீடியோவில் பீட்டர் பவுல் மற்றும் வனிதாவின் பேட்டியை கண்ட லட்சுமி ராமகிருஷ்ணன் தலையில் அடித்துக்கொண்டார். மேலும் உங்களுக்கு ஆதரவாக இருப்பேன் என்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் எலிசபெத்திற்கு ஆறுதல் கூறி இருந்தார்
இப்படி ஒரு நிலையில் எலிசபெத் மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் பேட்டி கொடுத்த அதே சேனலில் வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் லைவ் பேட்டி ஒன்றில்ஈடுபட்டுள்ளனர் .அந்த பேட்டியில் பேசியுள்ள வனிதா நீ யாரு மொதல்ல, நீ ஏன் இதுல தலையிடற, கிழிச்சி தொங்கவிட்ருவன் உனன். நீ ஒன்னும் பத்தினி மாதிரி போர்வ போத்தாத, ஒரு புருஷன வெச்சிக்கிட்டு இருந்தா நீ என்ன ஒரு யோக்கியமா, நானும் அதே இண்டஸ்ட்ரில இருக்கவ தான் உன்ன பத்தி தெரியாதடி. ஒரு புருஷன கட்டிக்கிட்டு 100 பேர வெச்சிக்கிட்டு இருக்க என்றெல்லாம் கண்ட மேனிக்கு கிழித்து தள்ளியுள்ளார் வனிதா.
இந்த வீடியோவை நான் போட்டு உன்ன கிழிக்கிறேன்டி என்று வயது வித்யாசம் பார்க்காமல் கண்ட மேனிக்கு திட்டித் தீர்த்து உள்ளார். மேலும், இந்த பேட்டியை எடுத்த யூடுயூப் சேனல் கூட ஒளிபரப்பவில்லை. ஆனால், இந்த பேட்டியை வீடியோ ரெக்கார்ட் செய்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வழக்கம் போல இந்த வீடியோவிற்கு கமன்ட்டை ஆப் செய்து உள்ளார்.




