என்னை பத்தி பேசினா தப்பில்ல, விஜயை பத்தி பேசினா தப்பா ? மீரா சர்ச்சை குறித்து வனிதா சரவெடி.

0
915
vanitha
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சமூகவலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதாவின் திருமண விஷயம் தான் அந்த சர்ச்சை கொஞ்சம் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீரா மிதுன் சர்ச்சை தான் சமூக வலைதளத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது இப்படி அடுத்தடுத்து பிக்பாஸ் பிரபலங்களின் சர்ச்சையை தொடர்ந்து சமூகவலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் அருமையான மீராமிதுன் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார் மேலும் இவருக்கும் அவருக்கும் கூட அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

-விளம்பரம்-
Bigg Boss Vanitha Indirect Message To Meera Mithun Controversy

பிக்பாஸ் வீட்டில் சேரன் பொருடா ஸ்கின் போது தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளி விட்டார் என்று மீராமிதுன் ஆடிய நாடகங்கள் நாம் அனைவரும் அறிவோம். பிக் பாஸ் நிகழ்ச்சி பின்னரும் தொடர்ந்து போட்டியாளர்கள் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்களைப் பேசி வந்த மீராமிதுன் தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு நடிகர்களான சூர்யா மற்றும் விஜய் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். இதனால் விஜய் மற்றும் சூர்யா விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் கடும் கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் மீரா மதுரையின் வரம்பு மீறிய பேச்சுக்களால் பல்வேறு பிரபலங்களும் மீரா மிதுன் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள் இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள வனிதா மீரா மிதுன் குறித்து பேசியதாவது மீராமிதுன் எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும் அவளுக்கு நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே அறிவுரை கூறி இருக்கிறேன் ஆனால் அவளுக்கு என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை. உண்மையில் அவரை விஜய் அல்லது சூர்யா ரசிகர்கள் டார்கெட் செய்தார்களா ? அதனால்தான் இப்படி செய்கிறார் என்பது எனக்கு தெரியவில்லை. ஆனால் உச்ச நடிகர்களை விமர்சிப்பதன் மூலம் பிரபலம் அடைந்து விடலாம் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான்.

தற்போது உள்ள சமூக வலைதளத்தில் யார் வேண்டுமானாலும் யாரை பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம் என்று நினைத்திருக்கிறார்கள். மேலும், என்னை பற்றி அவதூறாக பேசும் போது யாரும் ஏன் வரவில்லை. நான் மட்டும் தான் தனியாக சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தேன். தற்போது விஜய் பற்றி பேசும்போது மட்டும் ஏன் வருகிறார்கள். அப்போது வனிதாவை பற்றி பேசலாம் விஜயை பற்றி பேசக் கூடாதா ? அதற்கு காரணம் இந்த ஸ்டார் வேல்யூ தான். ஒரு உச்ச நட்சத்திரம் அந்தஸ்தில் இருக்கும் பிரபலங்களை பற்றி பேசினால் தான் அது மிகப்பெரிய பிரச்சனையாக மாறும். ஆனால் யாரைப் பற்றி பேசினாலும் அது தவறுதான் என்று ஒரு இருக்கிறார் வனிதா.

-விளம்பரம்-

Advertisement