இதுவரை வனிதாவும் அவரது அம்மா மஞ்சுளாவும் ஒன்றாக இருந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா ? இதோ புகைப்படம்.

0
1509
- Advertisement -

பிக் பாஸ் வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் கடந்த சில வாரமாக சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் விஷயமாக இருந்துவந்தது . இதனால் வனிதாவை பற்றிய பல்வேறு விஷயங்களை நெட்டிசன்கள் தோண்டி எடுத்துக்கொண்டு வந்தனர். வனிதா தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.

-விளம்பரம்-

மேலும், பிரபல நடிகரான அருண் விஜய்யின் சகோதரி என்பதும் அறிந்த விஷயம் தான். இப்படி இருக்க வனிதா விஜய்குமார் அருண் விஜய்யின் சொந்த சகோதரி இல்லை என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய். மேலும், இவருடன் அனிதா , கவிதா என்ற இரண்டு சகோதரிகள் பிறந்தனர். மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வந்தார். ஆனால், வனிதாவுடன் ஏற்பட்ட பிரச்சனையால் அவரை ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஒதுக்கி வைத்துவிட்டனர்.

மேலும், பல ஆண்டுகளாக நடிகை வனிதா, குடும்பத்தினரைப் பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் பீட்டர் பவுலுடன் லிவிங் டு கெதர் போல வாழ்ந்து வருகிறார். வனிதாவின் பல்வேறு புகைப்படங்கள் வெளியாகி நாளும் இவர் தனது அம்மாவுடன் இருக்கும் புகைப்படம் இதுவரை வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்னர் தனது அம்மாவுடன் நிகழ்ச்சி ஒன்றிற்கு வனிதா சென்ற போது எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement