நீ ரெண்டாவது லைவ்ல வா, நான் அந்த நேபால் பொண்ணோட லைவ் வரேன் – பீட்டர் பவுலுக்கு ரவீந்திரன் சவால்.

0
33747
ravi
- Advertisement -

வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண விஷயம் தான் தற்போது சரியான ஒரு விஷயமாக பேசப்பட்டு வருகிறது வனிதாவின் மூன்றாவது திருமணம் குறித்து பல்வேறு பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது வனிதா மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஏற்பட்ட மோதல்தான் பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது அதிலும் நேற்று லைவ் பேட்டியில் லட்சுமி ராமகிருஷ்ணனை வாடி போடி என்று தகாத வார்த்தையில் திட்டி தீர்த்து இருந்தார் வனிதா.

வீடியோவில் 15 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பீட்டரின் மனைவி எலிசபத், பல ஆண்டுகளுக்கு முன்னர் 10 எண்றதுக்குள்ள படத்தில் குரூப் டான்சராக இருந்த பெண்ணுடன் அவருக்கு தொடர்பு இருந்தது. அப்போது அவர், நீங்கள் இருவரும் சண்டை போடுங்கள் யார் வெற்றி பெருகிறீர்களோ அவர்களுக்கு தான் நான் என்று சொன்னான் என்றும் கூறியிருந்தார். அந்த டான்ஸர் என்று ரசிகர்கள் பலரும் தேடிக்கொண்டு இருந்தனர்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வனிதாவும் பீட்டர் பவுலும் இருவரும் இணைந்து பேட்டி ஒன்றை கொடுத்திருந்தார்கள் இந்த பேட்டியை பார்த்துவிட்டு தனது முகநூல் பக்கத்தில் ரசிகர்களுடன் லைவ் சேட்டில் வந்தார் ரவீந்திரன் அதில் பேசிய அவர் நீங்கள் பேட்டி கொடுத்து நேரத்தில் உங்களைப் பற்றி அனைத்தையும் நான் நோண்டி எடுத்துக் கொண்டிருந்தேன். இப்போது உனக்கு ஒன்றை சொல்லட்டுமா உங்களுக்கு யாராவது ஊர்மிளா ஷர்மா யார் என்பது தெரியுமா ?

வீடியோவில் 10 : 40 நிமிடத்தில் பார்க்கவும்

நீங்க அடுத்து பேட்டியை குடுங்க நான் அவங்களுடன் லைவ் பேட்டியில் வருகிறேன். மேலும், நீங்கள் பேட்டி கொடுப்பதற்கு முன்னர் அவர்கள் யார் என்று தமிழ்நாடு என்னுடைய லைவ் மூலமாக தெரிந்து கொள்ளட்டும் மேலும் இப்போது அவர்கள் நேபாளில் இருக்கிறார்கள் எனவே உங்களால் என்ன செய்ய முடியுமோ அதனை சீக்கிரம் செய்து விடுங்கள் என்று சவால் விட்டிருக்கிறார் ரவீந்திரன்.

-விளம்பரம்-

Advertisement