எனக்கு குரல் குடுத்தீங்க உண்மதான். ஆனா, நீங்க பண்றது தப்பு தான். நேத்து வனிதா பேசிய பேச்சால் கடுப்பான சனம் ஷெட்டி.

0
14079
vanitha
- Advertisement -

பிக்பாஸ் வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமண சர்ச்சை தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. வனிதா மூன்றாவது திருமண விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கெல்லாம் வனிதா பதிலடி கொடுத்து வருகிறார். அதிலும் சமீபத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வாடி போடி என்றும் செருப்பால அடிப்பேன் என்றும் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து நேற்று தயாரிப்பாளர் ரவீந்திரன் நடிகை ரித்திகா நடிகை கஸ்தூரி போன்றவர்கள் கூட லைவ் போட்டியில் கலந்துகொண்டு விவாதித்தார்கள்.

-விளம்பரம்-

இந்த லைவ் வேட்டியில் வம்படியாக கலந்து கொண்ட வழிதான் ரவீந்திரன் இடம் நீங்கள் ஏன் பீட்டர் பவுல் குறித்துப் பேசுகிறீர்கள். அவர்களுக்கு ஏற்கனவே பெண்களுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரிந்த விஷயம் தான். ஆண்கள் அப்படித்தான் இருப்பார்கள். ஏன் நானும் அப்படித்தான். எனவே, அதையெல்லாம் எனக்கு பிரச்சினை கிடையாது. மனைவியை வைத்துக்கொண்டு பிற பெண்களிடம் செல்லும் ஆண்கள் இந்த உலகத்தில் இல்லையா என்றெல்லாம் பேசி இருந்தார். தற்போது இந்த விஷயம் தான் சனம் ஷெட்டியை வணிதாவிற்கு எதிராக பேச வைத்திருக்கிறது.

இதையும் பாருங்க : தனது மகளின் முதல் பிறந்தநாளில் குயூட் வீடியோவை வெளியிட்ட நெடுஞ்சாலை பட நடிகை.

- Advertisement -

தர்ஷனின் முன்னாள் காதலியான சனம் ஷெட்டி விவகாரம் குறித்து நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். தர்ஷன் மற்றும் சனம் ஷெட்டி விஷயம் வெளியில் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது வனிதா தான் .இதனால் பல்வேறு போட்டிகளில் அனிதாவிற்கு நன்றி தெரிவித்திருக்கிறார். சனம் ஷெட்டி ஆனால் வனிதா நேற்று பேசிய விஷயத்தை பார்த்து கடுப்பாகி உள்ள சனம் ஷெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில், கள்ளத் தொடர்பை எந்த தவறும் இல்லை என்பது போல நியாயப்படுத்த வேண்டாம் வனிதாமா என்று கூறியுள்ளார். முழு வீடியோ கீழே,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட பேட்டி ஒன்றில் பங்கேற்ற சனம் ஷெட்டி இடம் வனிதா மற்றும் பீட்டர் பவுல் திருமணவிஷயம் குறித்து கேட்கப்பட்டது. ஆனால், அப்போது பதிலளித்த சனம் செட்டி, வனிதாவை எனக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது தான் தெரியும். அவருடன் நான் அவ்வப்போது பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். ஆனால், அந்த விவகாரம் குறித்து தான் எந்த கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஏனென்றால் அதைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறியிருந்தார். ஆனால், நாளுக்கு நாள் அதிகரிக்கும் வனிதாவின் அட்ராசிட்டியால் தற்போது சனம் ஷெட்டியே வனிதாவுக்கு அட்வைஸ் செய்யும் அளவிற்கு ஆகிவிட்டது

-விளம்பரம்-
Advertisement