வனிதாவை கண்ட மேனிக்கு பேசிய நபர் இவர் யார் தெரியுமா? இவருக்கு ஒன்னும் இது புதுசு இல்லபா.

0
88935
vanitha

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் மான வனிதாவின் மூன்றாம் திருமணம் பற்றிய செய்திகள்தான் தற்போது சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது.வனிதா 3-வது திருமணம் செய்து கொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே எலிசபெத் என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் இருக்கின்றார்கள். ஆனால், எலிசபெத்திற்கு விவாகரத்து கொடுக்காமலேயே பீட்டர், வனிதாவை திருமணம் செய்து கொண்டார் என்று எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதன் பின்புதான் வனிதாவின் திருமணம் பெரும் சர்ச்சையில் சிக்கியது.

ஆரம்பத்தில் இது தனது திருமணம்தான் என்று கூறி வந்த வனிதா எலிசபெத்தின் புகாருக்கு பின்னர் இது திருமணம் கிடையாது வெறும் அன்பின் பரிமாற்றம் மட்டும்தான் என்று அந்தர் பல்டி அடித்தார். இருப்பினும் தனது திருமணம் குறித்து விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்து வருகிறார் வனிதா. சமீபத்தில் வனிதாவின் திருமணத்தை விமர்சித்த பிரபல நடிகையான லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றவர்களை வனிதா திட்டி தீர்த்ததால் அவர்கள் இருவருமே வானிதாவிற்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மன்னிப்பு கேட்டார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் கவின் நடித்த நட்புனா என்ன தெரியுமா படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன், வனிதாவின் திருமணம் குறித்து வெளுத்து வாங்கி இருந்தால் அதற்கும் பதில் அளித்த வனிதா ரவீந்திரன் வாட்ஸ் அப் மூலம் மிரட்டும் தோணியில் சில மெசேஜ்களை அனுப்பி இருந்தார். இதையடுத்து ரவீந்திரன் அடுத்தடுத்து பேட்டிகளில் பேசி வருகிறார் அவர் பேசும்போது என்னை மட்டும் இவ்வளவு கேள்வி கேட்கிறீர்களே, சமீபத்தில் ராயபுரத்தில் சேர்ந்த ஒரு பெண்மணி உங்களை வறுத்தெடுத்து வருகிறார்களா அவர்களை எதுவும் கேட்க மாட்டீர்களா அதற்கு உங்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று கேட்டார்.

View this post on Instagram

Nothing else to say…

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

இப்படி ஒரு நிலையில் யூட்யூபில் சூர்யா தேவி என்பவரின் கணக்கிலிருந்து சில வீடியோக்கள் வைரலாக பேசப்பட்டு வந்தது. அந்த பெண்மணி வெளியிட்டுள்ள சில வீடியோக்களில் வனிதாவை வறுத்து எடுத்து இருக்கிறார். மேலும் வனிதா விஜயகுமார் திட்டத்தான் யூடியூப் சேனலை ஆரம்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை அவர் பதிவிட்டுள்ள அனைத்து வீடியோக்களும் வனிதாவை பற்றியும் அவரது திருமணம் பற்றியும் தான்.இந்த நிலையில் அந்த பெண் கைது செய்யப்பட்டார் என்று வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இதுக்கு மேல சொல்றதுக்கு ஒன்னும் இல்ல என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

வனிதாவை வறுத்தெடுத்த சூர்யா தேவி இதுபோன்ற சர்ச்சையான வீடியோக்களுக்கு புதிதான அவர் ஒன்றும் கிடையாது திருச்சியை பூர்வீகமாக கொண்ட இவர் சென்னையில் வசித்து வருகிறார் மேலும் கடந்த 2018ம் ஆண்டு இவர் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மற்றும் பிஜேபியின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்தும் அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டதால் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த செய்தியை தான் தற்போது வனிதா பகிர்ந்துள்ளார்.

Advertisement