மேக்கப் இல்லா புகைப்படம் என்று வனிதா போட்ட புகைப்படம் – அப்போ இது என்ன என்று வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
1022
Vanitha
- Advertisement -

நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதாதான் அவ்வப்போது சமூக வளைதளத்தில் விவாதப் பொருளாக மாறி விடுகிறார். பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். அதன் பின்னர் இவர் நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர் உடன் காதலில் இருந்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்த நிலையில் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் பிரிந்துவிட்டார்கள். அதன் பின்னர் தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வந்த வனிதா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பவுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

இவர்கள் இருவரின் திருமண விவகாரத்தில் எண்ணெற்ற பிரச்சனைகள் வெடித்தது. ஆனால் அதையெல்லாம் மீறி வனிதா, பீட்டர் பவுலை திருமணம் செய்துகொண்டார். இந்த பிரச்சனை ஒரு சில மாதங்கள் ஓடியது மேலும், விரைவில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொள்வதாகவும் இருந்தனர். இப்படி ஒரு நிலையில் பீட்டர் பவுல் குடிக்கு அடிமையாகி விட்டதால் அவரை பிரிந்து விட்டதாக கூறி இருந்தார் வனிதா. அதேபோல பீட்டர் பிரிந்த சோகத்தில் இருக்கும் வனிதா இனி கொஞ்சம் நாள் தான் சமூகவலைதளத்தில் வரமாட்டேன் என்றும் கூறியிருந்தார் ஆனால் இவர் பிரபல தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

- Advertisement -

அதில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேசி வருகிறார் வனிதா. இது ஒருபுறம் இருக்க பீட்டர் பவுல் தனக்கு விவாகரத்து தாராமலே வனிதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளதாக போலீசில் புகார் அளித்திருந்தார் அவரது முதல் மனைவி எலிசபெத். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வனிதா மற்றும் பீட்டர் பவுல் இருவரும் வரும் டிசம்பர் 23 ஆம் தேதி நீதி மன்றத்தில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் இதை பற்றி எல்லாம் எந்த கவலையும் இல்லாமல் தனது வேலைகளை செய்து வரும் வனிதா, சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் என்று தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். ஆனால், அந்த புகைப்படத்தில் வனிதா லிப் ஸ்டிக் போட்டு இருப்பதை சுட்டி காட்டி வரும் நெட்டிசன்கள் இது தான் உங்க No Makeup புகைப்படமா ? அப்போ லிப்ஸ்டிக் எல்லாம் மேக்கப் கிடையாதா என்று வறுத்தெடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement