இந்த ரணகலத்திலும் கணவருடன் லிப் லாக். புகைப்படத்தை கண்டு கழுவி ஊற்றிய ரசிகர்கள்.

0
4301
vanitha
- Advertisement -

பிக்பாஸ் மனிதனைப் பற்றி சொல்லவே வேண்டியது இல்லை இவர் சமீபகாலமாக சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டு தான் வருகிறார். விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமான இவர் இடையில் பிரபலமடைந்தது என்னவோ இவரது குடும்ப பிரச்சினைகள் மூலம்தான். இவருக்கும் இவரது தந்தை விஜயகுமார் குடும்ப பிரச்சினை காரணமாக சண்டை எழுந்தது. அந்த பிரச்சனைகள் போது வனிதா கொடுத்த பேட்டிகள் பெருமையானது. இதை அடுத்து இவர் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்டார்.

-விளம்பரம்-
View this post on Instagram

More kisses for the unromantics

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தவரை பலராலும் அறியப்பட்ட இவர் பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சி பின்னர் ஓரளவிற்கு நல்ல பெயரை எடுத்தார். இப்படி ஒரு நிலையில் தான் வனிதா பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக கடந்த சனிக்கிழமை அதாவது ஜூன் 27ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார் அனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி அது இரண்டுமே விவாகரத்தில் முடிந்த விஷயம் அனைவரும் அறிந்ததே. ஆனால், பீட்டருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருப்பது அவரது மனைவி எலிசபெத் அளித்த புகாருக்கு பின்னரே அனைவருக்கும் தெரியவந்தது. இந்த நிலையில் வனிதா, தனது மூன்றாவது கணவர் பீட்டர் பவுலுக்கு லிப் கிஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே இவர்களது திருமணத்தில் பீட்டர் பவுல் வனிதாவுக்கு பாய்ந்து முத்தம் கொடுத்தார். அந்த வீடியோவை கூட வனிதா தனது யூடூயூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், வனிதாவின் இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் வனிதாவை கழுவி ஊற்றி வருகின்றனர், மேலும், இந்த புகைப்படத்தை எல்லாம் பதிவிடாதீர்கள் என்றும் அறிவுறுத்து வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க பீட்டரின் மனைவி, சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்றார். அதில் தனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே எப்படி வனிதாவை பீட்டர் திருமணம் செய்து கொண்டார் என்றும் கூறியதோடு வனிதா மற்றும் பீட்டரை கண்ட மேனிக்கு வசை பாடியுள்ளார். ஆனால், இப்படி ஒரு ரணகளத்திலும் எதை பற்றியும் கவலைப்படாமல் வனிதா இந்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement