எப்படி எடையை குறைச்சீங்க. வனிதாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

0
110335
vanitha
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகென் முதலிடத்தையும் சாண்டி இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்தார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான வனிதாவும் ஒருவர். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.

-விளம்பரம்-
View this post on Instagram

#cookwithcomali

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் தான் வனிதா என்பதும் குறிப்பிடத்தக்கது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பதாகவே வனிதாவுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஏற்பட்ட பிரச்சனை ஊடகங்களில் மிகவும் வைரலாக பரவி வந்தது. மேலும், விஜயகுமாருக்கு சொந்தமான வீட்டில் தங்கி வனிதாவை வனிதாவை போலீசார் காலி செய்ய முயன்றபோது நடுரோட்டில் நின்று கொண்டு போலீசார்கள் இடமே வனிதா நைட்டியை மடித்துக் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.

- Advertisement -

இதனால் வனிதா என்றாலே மிகவும் சர்ச்சையான பேர்வழிதான் என்ற ஒரு தோற்றம் வனிதாவிற்கு உருவானது. இப்படிப்பட்ட ஒரு நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் வனிதா. பிக் பாஸில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே மற்ற போட்டியாளர்களை வச்சி செய்து வந்தார் வனிதா. இந்த சீசன் மிகவும் பரபரப்பாக சென்றதற்கு காரணம் வனிதா தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. பிக்பாஸ் ஆரம்பித்த நாள் முதலே மற்ற போட்டியாளர்களை அடிக்கடி சண்டை இட்டுக்கொண்டு பிக்பாஸ் வீட்டை பரபரப்பாகவே வைத்து வந்தார் வனிதா.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடிகை வனிதா விரைவில் ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவித்திருந்தார். இதற்கிடையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் நடிகை வனிதாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியானது அதில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்ததை விட உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக மாறியிருக்கிறார் வனிதா. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது

Advertisement