நீயும் வாரிசு நடிகை தான். வனிதாவை டார்கெட் செய்த மீரா – வனிதா கொடுத்த ஷாக்கிங் பதில்.

0
18308
vanitha
- Advertisement -

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சமூகவலைதளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதாவின் திருமண விஷயம் தான் அந்த சர்ச்சை கொஞ்சம் ஓய்ந்திருந்த நிலையில் தற்போது மீரா மிதுன் சர்ச்சை தான் சமூக வலைதளத்தில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது இப்படி அடுத்தடுத்து பிக்பாஸ் பிரபலங்களின் சர்ச்சையை தொடர்ந்து சமூகவலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர் அருமையான மீராமிதுன் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோதே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்தார் மேலும் இவருக்கும் வனிதாவிற்கு கூட அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சி பின்னரும் தொடர்ந்து போட்டியாளர்கள் குறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துக்களைப் பேசி வந்த மீராமிதுன் தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் ஒரு நடிகர்களான சூர்யா மற்றும் விஜய் குறித்து தொடர்ந்து அவதூறாக பேசி வருகிறார். இதனால் விஜய் மற்றும் சூர்யா விஜய் மற்றும் சூர்யா ரசிகர்களின் கடும் கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் மீரா மதுரையின் வரம்பு மீறிய பேச்சுக்களால் பல்வேறு பிரபலங்களும் மீரா மிதுன் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள் இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள வனிதா மீரா மிதுன் குறித்து பேசியதாவதுமீராமிதுன் எனக்கு தனிப்பட்ட முறையில் நன்றாக தெரியும் அவளுக்கு நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோதே அறிவுரை கூறி இருக்கிறேன் ஆனால் அவளுக்கு என்ன பிரச்சனை என்பது தெரியவில்லை. அவர் சொல்வது போல தமிழ் சினிமாவில் நேபோடிசம் எல்லாம் கிடையாது என்று கூறியிருந்தார்.

வனிதாவின் இந்த பேட்டிக்கு பதிலடி கொடுத்துள்ள மீரா, உன் சமீபத்திய பேட்டி நான் பார்த்தேன் வனிதா. நீ கூட நேபோட்டிசம் ப்ராடக்ட் தான். அதனால் என்னுடைய யுத்தத்தை ஏற்றுக் கொள்ள மாட்டாய். ஏன் அனைவரும் நானொருசெலப்ரிட்டி என்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறீர்கள். நீங்கள் கொடுத்த பேட்டி கூட மக்களை கவர வேண்டும் என்பதற்காக என்னை பற்றி தான் இருக்கிறது. அனைத்துக்கும் ஈகோ தான் காரணமா ? பிக்பாஸ் ஒன்னும் என்னை பிரபலமாகவில்லை அது என்னுடைய புகழுக்கு மேலும் ஒரு பெயர் அவ்வளவுதான் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-

தற்போது மீரா மிதுனுக்கு பதில் கொடுத்துள்ள வனிதா, உன்னுடைய தன்னம்பிக்கை எனக்கு பிடித்திருக்கிறது உன்னுடைய சாதனைகளை நான் மதிக்கிறேன். ஆனால் யாரையும் குறை கூறாமல் உன் வாழ்க்கையை வாழு. தொழில்ரீதியாக எது வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் ஒரு குடும்பத்தை தவறாக பேசக்கூடாது. நேபோட்டிசம் பற்றி யார் வேண்டுமானாலும் பேசலாம். நீ படும் கஷ்டம் என்னவென்று எனக்கு தெரிகிறது. ஆனால், உன்னுடைய போராட்டத்தில் தேவையில்லாமல் யாரையும் இழுக்காதே. உன்னுடைய வலி உன்னுடையது உன் வாழ்க்கையை நீ வாழ. வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்

Advertisement