கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது வனிதா மற்றும் பீட்டர் பவுலின் திருமணம் தான். நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான வனிதா, பீட்டர் பவுல் என்பவரை மூன்றாம் முறையாக திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வனிதா மூன்றாம் திருமணம் செய்துகொண்ட பீட்டர் பவுலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருந்த நிலையில் விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர் பவுலின் மனைவி எலிசபெத் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த விஷயம் சமூக வலைதளத்தில் சில காலம் பேசும் பொருளாக இருந்து வந்தது.
இந்த விஷயத்தில் பல்வேறு பிரபலங்களும் தங்கள் கருத்தை தெரிவிக்க பின்னர் அது குழாய் அடி சண்டை ரேன்ஜிக்கு மாறியது. அதிலும் தனது திருமண விஷயத்தில் தலையிட்டதால் லட்சுமி ராமகிருஷ்ணனை லைவ் பேட்டியில் வாடி போடி என்று படு மோசமாக பேசி அசிங்கப்படுத்தினார் வனிதா. இதையடுத்து தன்னை அவதூறாக பேசி விட்டார் என்று வனிதா மீது லட்சுமி ராமகிருஷ்ணன் மான நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
இதையும் பாருங்க : சென்னையில் விஜய்க்கு சிலை – அதுவும் எந்த இடத்தில் வைத்துள்ளார்கள் பாருங்க.
அதே போல தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்து தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தினார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் மீது வனிதாவும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்கள். இப்படி ஒரு நிலையில் மீண்டும் லட்சுமி ராமகிருஷ்ணனை வெளுத்து வாங்கியுள்ளார் வனிதா. சமீபத்தில் நடிகை வனிதா, பவர் ஸ்டாருடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது.
இதற்க்கு பலரும் பல விதமான கருத்துக்களை தெரிவிக்க, ட்விட்டரில் ரசிகர் ஒருவர் இந்த புகைப்படத்தை பற்றி லட்சுமி ராமகிருஷ்ணன்னிடன் கருத்து கேட்க, அதற்கு லட்சுமி ராமகிருஷ்ணனோ இதனைப் பார்க்கும்போது மிகவும் காமெடியாக இருக்கிறது என்று கமன்ட் செய்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள வனிதா, அருவருப்பான விஷமத்தன்மை கொண்ட இந்த லேடியை நான் நேசிக்கிறன். இவர் என்னுடைய ரகசிய ரசிகையாக இருந்து வருகிறார் என்று பதிலடி கொடுத்துள்ளார்.