இத ஏன் இப்படி சுத்தி வளைச்சி சொல்றீங்க - முதன் முறையாக சஞ்சீவுடன் இருக்கும் உறவுமுறை குறித்து அறிவித்த வனிதா.

By Rajkumar · 17/6/2021

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருன வனிதா பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்தான். மேலும், வனிதா விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதேபோல நடிகை வனிதா அறிமுகமான இதே படத்தில் விஜய்யின் நண்பராக நடித்த சஞ்சீவ் கூட வனிதாவுக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரர் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.

நடிகர் சஞ்சீவ் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இவர் விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.நடிகர் சஞ்சீவ் 1989 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான பொன்மனச் செல்வன் என்ற படத்தில் அறிமுகமானார் அதன்பின்னர் சந்திரலேகா நிலாவே வா பத்ரி போன்ற பல்வேறு படங்களில் துணை நடிகராக நடித்து இருந்தார். இறுதியாக மாஸ்டர் படத்திலும் நடித்து இருந்தார். நடிகர் சஞ்சீவ், வனிதாவிற்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரர் என்பது பலரும் அறிந்திராத ஒரு விஷயம்.

இதையும் பாருங்க : கண்ணாடி முன்பு ஜிம் உடையில் செல்ஃபி - பாபநாசம் மீனு குட்டியாப்பா இது.

எப்படியெனில் வனிதாவின் அம்மாவான மறைந்த நடிகை மஞ்சுளாவின் சகோதரி யின் மகன் தான் சஞ்சீவ். ஆனால், இதுவரை இதை அடிக்கடி சஞ்சீவ் எங்கேயும் சொன்னது இல்லை. அதே போல சஞ்சீவ் தனது உறவினர் என்று இதுநாள் வரை வனிதா பொது வெளியில் சொன்னது இல்லை. இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக தனக்கும் சஞ்சீவிற்கும் இருக்கும் உறவு குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் சஞ்சீவ் மற்றும் அவரது குடும்பத்தாருடன் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார்.

மேலும், சஞ்சீவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு  'என்னுடைய சகோதரர்' என்று அவர் குறிப்பிட்டுஇருந்தார் வனிதா. இதனை பார்த்த அவருடைய ரசிகர்கள் ’சஞ்சீவ் எப்படி உங்களுக்கு சகோதரர் ஆவார்'? என்று கேள்வி எழுப்பிய நிலையில் இது குறித்து வனிதா விளக்கம் அளித்துள்ளார். அந்த விளக்கத்தில் ’தன்னுடைய தாயார் மஞ்சுளாவின் சகோதரி ஷ்யாமளா மகன் தான் சஞ்சீவ் என்றும், அதனால் சஞ்சீவ் எனக்கு சகோதரர் தான்' என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் தம்பின்னு சொல்லாம சுத்தி வளைச்சு எப்படியெல்லாம் சொல்றீங்க என்று கேலி செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full