கண்ணாடி முன்பு ஜிம் உடையில் செல்ஃபி – பாபநாசம் மீனு குட்டியாப்பா இது.

0
1686
esther
- Advertisement -

மலையாள சினிமாவுலகில் மிக பிரபல இயக்குனரான ஜீத்து ஜோசப் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளிவந்த திரிஷ்யம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் மோகன்லால், மீனா, பேபி எஸ்தர் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் நல்ல வசூலையும், விமர்சனத்தையும் பெற்றுத் தந்தது. இந்த படத்தை கன்னடம், தெலுங்கு, தமிழ், இந்தி என 4 மொழிகளிலும் மறு ஆக்கம் செய்யப்பட்டது.முதல் பாகம் முடிந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ‘திரிஷ்யம் 2’ படம் உருவாகியது. படத்திலும் அதே 6 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் நடக்கும் கதையுடன் தான் துவங்குகியது இந்த படம்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-99-589x1024.jpg

சாதாரண கேபிள் ஆபரேட்டராக இருந்த மோகன்லால், இப்போது ஒரு தியேட்டர் உரிமையாளராக இருக்கிறார். தான் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையைப் படமாகத் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.இவர்களின் மூத்த மகள் அன்ஸிபா, முன்பு நடந்த கொலை சம்பவத்தில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறார். மோகன்லாலின் வளர்ச்சியால் பொறாமையில் இருக்கும் சிலர் கொலையை அவர்தான் செய்ததாகவே நம்புகின்றனர்.

இதையும் பாருங்க : மாணவிகள் பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவின் இந்த வீடியோவை தான் விவேக் இந்த காமெடில வச்சி செஞ்சிருக்காரு.

- Advertisement -

இந்நிலையில், மோகன்லாலை மீண்டும் சிக்கவைக்க காத்திருக்கும் போலீஸுக்கு ஒரு துப்பு கிடைக்கிறது.இதனால் மீண்டும் சிக்கலில் மாட்டுகிறார் மோகன்லால்.இறுதியில் போலீசிடம் மோகன்லால் சிக்கினாரா? போலீஸ் விசாரணையை மோகன்லால் எப்படி எதிர்கொண்டனர்? இறுதியில் மோகன் லால் குடும்பம் தப்பித்ததா இல்லையா என்பது தான் கதை. முதல் பாகத்தை போலவே திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகத்திலும் மோகன் லால் மகள்களாக இருவர் நடித்து இருந்தனர்.

இதில் எஸ்தர் அணில், தமிழில் பாபநாசம் படத்தில் கூட கமலின் மகளாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இவர் தெலுங்கில் எடுக்கப்பட்ட திரிஷ்யம் ரீ -மேக்கில் வெங்கடேஷின் மகளாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் கண்ணாடி முன்பு ஜிம் உடையில் செல்ஃபி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement