என்னோட யூடுயூப் மாச வருமானம் – ஓப்பனாக சொன்ன வனிதா. எவ்ளோ சம்பாதிக்கறாங்க தெரியுமா ?

0
2593
Vanitha
- Advertisement -

பிரபல பெரிய நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை நடிப்பையும் தாண்டி பல விதமான சைட் பிஸ்னஸ்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீப காலமாக ஒவ்வொரு நடிகைகளும் தங்களுக்கென்று ஒரு யூடுயூப் சேனலை ஆரம்பித்து அதன் மூலம் மாசம் பல லட்சங்களை சம்பாதித்து வருகின்றனர். அதிலும் விஜய் டிவியில் இருக்கும் பெரும்பாலான நடிகைகளுக்கு சொந்தமாக யூடுயூப் சேனல் இருந்து வருகிறது. அந்த வகையில் விஜய் டிவி மூலம் ரீ என்ட்ரி கொடுத்து தற்போது கலக்கி கொண்டு இருக்கும் வனிதாவும் சொந்தமாக யூடுயூப் சேனலை வைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா இவர்களின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். திருமணத்துக்கு பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார் வனிதா.

- Advertisement -

பின் மூன்று பிள்ளைகளுக்கு தாயானார் வனிதா. இதையடுத்து குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக வனிதாவிற்கு இரண்டு முறை விவாகரத்து ஏற்பட்டது. அது மட்டுமில்லாமல் தன் தந்தையுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தன்னுடைய இரண்டு மகள்களுடன் தனித்தனியாக வசித்து வருகிறார் வனிதா. பின் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு வனிதா அவர்கள் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருந்தார். தற்போது இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார். இருந்தும் இவரைக் குறித்து பல சர்ச்சைகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன.

-விளம்பரம்-

பிக் பாஸில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே மற்ற போட்டியாளர்களை வச்சி செய்து வந்தார் வனிதா. சொல்லபோன்னால் தான் வனிதாவால் தான் trp எகிறியது. இதனால் வனிதாவை தக்க வைத்துக்கொண்ட விஜய் டிவி வனிதாவை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வைத்தார்கள். அதிலும் முதல் இடத்தை பிடித்தார் வனிதா. இதனை தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அசத்திய இவர் பின்னர் யூடுயூப் சேனலையும் துவங்கினர்.

இதிலும் வனிதா, சமையல் சம்மந்தபட்ட வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த சேனலை தற்போது 7 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா தன்னுடைய யூடுயூப் வருமானம் குறித்து பேசி இருக்கிறது. அதில் தொடர்ந்து வீடியோ போட்டுக்கொண்டே வந்தால் ஒரு மாதத்திற்கு ஒன்றரை லட்சம் ருபாய் வரும், அதுவே சரியாக கன்டென்ட் போடாமல் இருந்தால் சில நேரங்களில் மாசம் 5 ஆயிரம், 10 ஆயிரம் கூட வருமானம் இருக்காது என்று கூறியுள்ளார்.

Advertisement