சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் வனிதா சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். பின் நடிகை வனிதா 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
நடிகை வனிதா அவர்கள் ராஜன் ஆனந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது நடிகை வனிதா அவர்கள் தனியாகத்தான் தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். நடிகை வனிதாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளார்கள். சமீபத்தில் கூட இவர்களின் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை வனிதா.அதே போல சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக்கு வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசையும் தட்டிச் சென்றார்.அதே போல வனிதா சொந்தமாக ஒரு யூடுயூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 22) விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் வனிதா. அந்த வீடியோவில் தனது மகன் ஸ்ரீஹரியின் முதல் பிறந்தநாளில் விஜய்யுடன் எடுத்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், விரைவில் இந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிடுவதாகவும் கூறியுள்ளார் வனிதா. இதோ அதில் ஒரு சில புகைப்படங்கள்.