எதாவது அறிவிருக்கா ? வனிதா செய்த செயலால் போன் செய்து திட்டியுள்ள விஜய் சேதுபதி.

0
124395
vanitha-vijay-sethupathi
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ மாஸ் நடிகர்கள் இருந்தாலும் ஒரு சில நடிகர்களை மட்டும் தான் அனைத்து நடிகரின் ரசிகர்களுக்கும் பிடிக்கும், அந்த வகையில் விஜய் சேதுபதியும் ஒருவர். ஆரம்பகாலத்தில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி தற்போது ரஜினி, விஜய் என்று மாஸ் நடிகர்களுக்கு வில்லனாக நடித்து வரும் அளவிற்கு ஒரு மாபெரும் நடிகராக மாறிவிட்டார். இவரைப் பற்றி கூறும் பலரும் முதலில் வருவது இவருடைய எதார்த்தமான பேச்சையும், தன்னடக்கத்தையும் தான். அந்த வகையில் இவருடனான சந்திப்பு குறித்தும் இவருடன் பேசிய அனுபவம் குறித்தும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் நடிகை வனிதா.

-விளம்பரம்-
Vanitha

தமிழ் சினிமாவின் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகளான வனிதா, விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்த வனிதா குடும்ப பிரச்சனை காரணமாக பல ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார். மேலும், கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டார்.

- Advertisement -

இதையும் பாருங்க : ‘ஜில்லா விட்டு ஜில்லா’ பாடலில் வந்த இவங்கதான் விஜய்யின் இந்த படத்தில் அம்மாவாக நடிச்சவங்க.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வனிதா தமிழ்சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர் நடிகைகள் குறித்து பேசி இருந்தார் அப்போது விஜய் சேதுபதியின் புகைப்படத்தை காண்பித்ததும் வனிதா அவருடனான முதல் சந்திப்பை நினைவு கூர்ந்துள்ளார். அதில், மற்றவர்களைப் போல நானும் இவரது மிகப்பெரிய ரசிகை. தமிழ்சினிமாவில் விஜய்க்கு பின்னர் ஒரு நடிகருக்கு ரசிகை என்று சொல்லிக்கொள்ள பெருமைப்படுகிறேன் என்றால் அது கண்டிப்பாக விஜய் சேதுபதிதான். இரண்டு மூன்று வருடத்திற்கு முன்பாக நான் அவரிடம் தனிப்பட்ட முறையில் ஏதோ ஒரு விஷயத்தை பேசுவதற்காக அவருடைய நம்பரை பெற்று அவருக்கு நான் மெசேஜ் செய்திருந்தேன். அதில் என்னுடைய பெயரை குறிப்பிட்டு என்னை பற்றி ஒரு மிகப்பெரிய கதையை எழுதி அவருக்கு அனுப்பி இருந்தேன்.

-விளம்பரம்-

விடியோவில் 13:27 நிமிடத்தில் பார்க்கவும்

நான் மெசேஜ் அனுப்பிய அடுத்த நொடியே எனக்கு அவரிடம் இருந்து செல்போனில் அழைப்பு வந்தது. அதில், உங்களுக்கு ஏதாவது அறிவு இருக்கிறதா என்று அவ்வளவு உரிமையாக என்னிடம் கூறினார். நான் உடனே ஏன் என்று கேட்டதற்கு நீங்கள் போன் செய்து நான் தான் வனிதா விஜயகுமார் என்று சொன்னால் எனக்கு தெரியாதா எதற்காக இவ்வளவு விளக்கத்தை கொடுக்கிறீர்கள்.அந்த அளவிற்கு மிகவும் தன்னடக்கம் ஆன ஒரு மனிதர் என்னுடைய படங்களை எல்லாம் ரசித்து பார்த்துள்ளதாக என்னிடம் கூறினார் அவர் வேண்டுமானால் என்னிடம் சாதாரணமாக பேசிவிட்டு இருக்கலாம் ஆனால் அவர் என்னிடம் அவ்வளவு அழகாக பேசி நான் உங்களுடைய ரசிகன் என்று கூறி இருந்தார்.

அதன் பின்னர் நான் என்னுடைய மகளை அழைத்துக்கொண்டு அவருடைய சூப்பர் டீலக்ஸ் படத்தின் போது அவரை சந்திக்க நேரில் சென்றிருந்தேன். நான் சென்றபோது அவர் பெண் கெட்டப்பில் இருந்தார். அப்போது நான் போட்டோ கூட எடுத்துக் கொள்ளவில்லை. அவர் பெண் கெட்டப்பில் இருப்பதை நான் கண்டதும் மிகவும் வெக்கப்பட்டு விட்டார். அவர் என்னுடைய கண்ணை பார்க்க கூட பேசவில்லை அவர் மிகவும் இனிமையான மனிதர் என்று கூறியுள்ளார் வனிதா.

Advertisement