என்றும் பதினாறாக இருக்கும் நடிகர் என்னை தொரத்தி தொரத்தி காதலித்தார். புதிய குண்டை போட்ட வனிதா.

0
111117
Vanitha
- Advertisement -

சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை வனிதா விஜயகுமார். நடிகர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தின் மூலம் தான் வனிதா சினிமா உலகிற்கு அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்திருந்தார். பின் நடிகை வனிதா 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2005 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

-விளம்பரம்-

வீடியோவில் 3:23 நிமிடதிற்கு பின் பார்க்கவும்

- Advertisement -

நடிகை வனிதா அவர்கள் ராஜன் ஆனந்த் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தார். தற்போது நடிகை வனிதா அவர்கள் தனியாகத்தான் தன் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். நடிகை வனிதாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளார்கள். சமீபத்தில் கூட இவர்களின் குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் நடிகை வனிதா.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது அனைவர் கண்களுக்கும் சொர்ணாக்காவாகவே தெரிந்தார் வனிதா விஜயகுமார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல் நாளிலிருந்தே நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து வந்தார் வனிதா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வனிதா அவர்கள் குக் வித் கோமாளி, சீரியல் என்று பிசியாக நடித்து வருகிறார். இந்நிலையில் வனிதா விஜயகுமார் தன்னுடைய இளம் வயதில் நடந்த காதல் அனுபவத்தை குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அதில் அவர் கூறியது, எனக்கு என்னுடைய காதல் 14 வயதில் தொடங்கியது. ஒரு போர்த் ஸ்டாண்டேட் (4th ) குட்டிப்பையன் துரத்தி துரத்தி என்ன லவ் பண்ணான் சொல்லும் போது எனக்கு சிரிப்பு தான் வந்துச்சு. எங்க வீட்டில் சொல்லும் போது அனைவரும் ஆடிப் போயிட்டாங்க.

-விளம்பரம்-

இளமையான, துறுதுறுப்பான பையன் அவன். அவன் என்றும் 16 தான்.இப்போ சினிமா துறையில் தான் இருக்கிறான். அவன் யார் என்று நான் சொல்ல விரும்பலை. எனக்கு வந்த முதல் காதல் அது தான்.பிறகு பல வருடங்கள் கழித்து நாங்கள் நண்பர்களாக மாறிட்டோம். அது காதல் என்று சொல்ல முடியாது. பப்பி லவ் என்று சொல்லலாம். அது ஒருவிதமான கிரஷ். அவன் சினிமா துறையில் நல்ல பிரபலம் ஆயிட்டாரு. காதல் ஒரு அழகானது என்று கூறினார். இப்படி தன் காதல் குறித்து வனிதா பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் அனைவரும் அந்த சிறுவயதில் வனிதாவை காதலித்தது சிம்புவாக இருக்குமோ, விஜய்யாக இருக்குமோ என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்பதை கமெண்டில் தெரிவியுங்கள்.

Advertisement