அபிக்கு அறிவுரை வழங்கிய லாஸ்லியா.! வாயடைத்து போய் வனிதா போட்ட ட்வீட்.!

0
19340
vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா சென்ற பிறகு ஒரு சுவாரஸ்யமே இல்லாமல் போய்விட்டது. அவருக்கு பின்னர் மீரா ஓரளவிற்கு கண்டன்ட் கொடுத்து வந்தார், தற்போது அவரும் வெளியேறிவிட்டார். இருப்பினும் வெளியே சென்றாலும் பிக் பாஸை தொடர்ந்து வரும் வனிதா அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ட்வீட் செய்து வருகிறார்.

கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா, சாக்க்ஷி பிரச்சனை தான் போய்க்கொண்டு இருகிறது. தற்போது லாஸ்லியா கொஞ்சம் கொஞ்சமாக கவின் மீது காதலில் விழுந்து வருவதையும் நம்மால் கவனிக்கமுடிகிறது. அதே போல லாஸ்லியா தற்போது பெண் போட்டியாளர்களின் அபிராமியுடன் தான் நெருக்கம் காண்பித்து வருகிறார்.

- Advertisement -

அபிராமி, முகெனை காதலிப்பது நாம் தெரியும். ஆனால், முகெனுக்கு காதலி இருப்பதால் அபிராமியின் காதலை தொடர்ந்து மறுத்து வருகிறார். இந்த நிலையில் அபிராமிக்கு அறிவுரை கூறியுள்ள லாஸ்லியா, எவன் என்ன சொன்னாலும் நாம சந்தோசமாக இருக்கோம என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இந்த விடியோவை பகிர்ந்துள்ள வனிதா, அபிராமிக்கு அறிவுரை கூறும் லாஸ்லியாவின் பாவனையை பாருங்க, அட கடவுளே என்று பதிவிட்டுள்ளார். இந்த விடியோவை கண்ட பலரும் லாஸ்லியாவின் உண்மையான முகம் இதுதான், அவர் மிகவும் சுயநலவாதி என்று கமன்ட் செய்து வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement