படிச்சா போதுமா ? அவ தம் அடிச்சா, உனக்கு என்ன? விசித்திராவை வெளுத்து வாங்கிய வனிதா

0
2609
- Advertisement -

விசித்ராவை பேட்டியில் வனிதா விஜயகுமார் வெளுத்து வாங்கி இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி குறித்து தான். அனைவரும் எதிர்பார்த்த பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கோலாகலமாக கடந்த ஞாயிற்று கிழமை தொடங்கி ஒரு வாரத்தை கடந்து இருக்கிறது. இந்த சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்கி வருகிறார்.

-விளம்பரம்-

.இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு விஜய், ஜோவிகா விஜயகுமார், அக்ஷயா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றனர். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான மற்றும் பரிட்சயம் இல்லாத பலர் கலந்துகொண்டு உள்ளனர்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஜோவிகா:

அந்த வகையில் வனிதா மகள் ஜோவிகாவும் ஒருவர். போட்டியாளர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த முதல் நாள் அன்றே இந்த நிகழ்ச்சிக்கு வந்தது குறித்தும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த அனுபவங்களை குறித்தும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதில் ஜோவிகா, எனக்கு படிப்பு வராது. படிப்பில் பெரிதாக ஆர்வம் இல்லை என்று சொல்லி இருந்தார். உடனே பலருமே ஜோவிகாவிற்கு அறிவுரை கூற ஆரம்பித்து விட்டார்கள். குறிப்பாக யுகேந்திரன், விசித்திரா படிப்பு குறித்து அறிவுரை வழங்கி இருந்தார்கள்.

ஜோவிகா – விசித்திரா சண்டை:

ஆனால், இதையெல்லாம் ஜோவிகா கண்டுகொள்ளாதது போல் தான் இருந்தார். பின் படிப்பு குறித்து விசித்ரா-ஜோவிகா இடையே பெரிய கலவரம் நடந்தது. சொல்லப்போனால், கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியா முழுவதும் ஜோவிகா- விசித்ரா இடையே நடந்த சண்டைதான் ஹாட் டாபிக்காக சென்று கொண்டிருந்தது. இதற்கு சிலர் ஜோவிகாவிற்கு ஆதரவாகவும் சிலர் விசித்ராவுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து இருந்தார்கள். மேலும், ஜோவிகா பேசியிருந்தது சரிதான் என்று வனிதா ஆதங்கமாக பேசினார்.

-விளம்பரம்-

வனிதா அளித்த பேட்டி:

இதை அடுத்து வனிதாவிடமும் பலரும் ஜோவிகா பேசியது குறித்து பேட்டி எடுத்திருந்தார்கள். இதனை அடுத்து வனிதா விஜயகுமார் விசித்ராவை குறித்து கடுமையாக விமர்சித்து பேசுகிறார். குறிப்பாக, பிக் பாஸ் வீட்டில் தம்மடிப்பது, பெண்கள் டாட்டூ போடுவது குறித்து விசித்திரா பேசியிருந்ததுக்கு வனிதா பேட்டியில் கூறி இருப்பது, உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். பிக் பாஸ் வீட்டில் இருக்கிற பிள்ளைகள் எல்லாம் நீங்கள் பெத்த பிள்ளைகள் மாதிரி ஓவராக அக்கறை காட்டாதீர்கள்.

விசித்திராவை வெளுத்து வாங்கிய வனிதா:

ஒரு பொண்ணு டாட்டூ போட்டால் அவங்க அம்மா அப்பா இருக்கிறார்கள் பார்த்துப்பாங்க. ஒரு பொண்ணு தம்மு அடிக்கிறாளா? இல்லையா? என்பதை அவர்கள் பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள். உங்களுக்கு என்ன? அந்த பிள்ளைகள் எல்லாம் நேந்து விட்டிருக்கிறார்களா? நீங்க மூணு பசங்களுக்கு அம்மாவா இருக்கலாம். நீங்கள் உங்க பசங்கள பாருங்க. ஏன் உங்க பசங்களை விட்டு நூறு நாள் பிக்பாஸ் வீட்டுக்கு போனீங்க. உங்க பிள்ளைகள் வெளியில் என்ன பண்ண போகுதோ? மத்த பிள்ளைகளை ஓவரா கரெக்ட் பண்ண வேணாம். நீங்க எதுக்காக பிக் பாஸ் வீட்டுக்கு வந்தீங்களோ அந்த வேலையை மட்டும் பாருங்க. மத்த விஷயத்தில் மூக்கை நுழைக்காதீங்க என்று பேசி இருக்கிறார்.

Advertisement