வனிதாவின் மகள் மட்டும் இல்ல மகனும் சிறு வயதிலேய நடித்துள்ளார் – அதுவும் இந்த கார்த்தி படத்தில்

0
146
- Advertisement -

சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிக பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் தான் வனிதா. இவர் விஜய் நடித்த சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் சில படங்களில் மட்டும் தான் நடித்தார். பின் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர் வேற லெவல் பிரபலமானார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார். ஆனால், இவருக்கும் நிகழ்ச்சியின் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பின்னர் இவர் பாதியிலேயே அந்த நிகழ்ச்சியை விட்டு விலகி இருந்தார்.அதே போல பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

- Advertisement -

வனிதாவிற்கு அமையாத குடும்ப வாழ்க்கை :

ஆனால், அந்த நிகழ்ச்சியிலும் பிரச்சனை செய்துவிட்டு பாதியில் வெளியேறினார் வனிதா. ஆனாலும், இவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர் படங்கள், சீரியல்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என எதையும் விட்டு வைக்காமல் ஏதாவது ஒரு வேலையை செய்து கொண்டு இருக்கிறார்.வனிதா சினிமா உலகிலும், சோசியல் மீடியாவிலும் பிசியாக இருந்தாலும் இவருடைய குடும்ப வாழ்க்கையில் தோல்வியைத்தான் சந்தித்து இருக்கிறார்.

வனிதாவின் திருமணம் :

வனிதாவிற்கு ஏற்கனவே 2 முறை திருமணம் ஆகி பின்னர் அந்த இரண்டு திருமணம் விவாகரத்தில் முடிந்தது அனைவரும் அறிந்த விஷயம் தான். வனிதா கடந்த 2000ம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும், வனிதா மற்றும் ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த ஓர் ஆண்டிலேயே ஸ்ரீஹரி என்ற மகனும் ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள். நன்றாக சென்ற இவர்களது திருமண மகளும் கடந்த 2005ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது.

-விளம்பரம்-

வனிதாவின் ஒரே மகன் ஸ்ரீஹரி :

அதன் பின்னர் தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஆகாஷ். அதன் பின்னர் ஆகாஷுடன் தான் வனிதாவின் மகன் வளர்ந்து வருகிறார். மேலும், வனிதா மகன் ஸ்ரீஹரியும் நடிகராக தான் முயற்சி செய்து வருகிறார். ஸ்ரீஹரி கார்த்தி நடித்த ‘சகுனி’ படத்தில் சிறுவயது கார்த்திக்காக நடித்து இருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட இவர் குறும்படம் ஒன்றில் நடித்து இருந்தார்.

ஹீரோவாகும் ஸ்ரீஹரி :

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீஹரி தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுஇருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் உங்கள் மாமா அருண் விஜய் போல இருக்கிறீர்கள், துருவ் விக்ரம் போல இருக்கிறீர்கள் என்று பாராட்டி தள்ளி வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஸ்ரீஹரி ஹீரோவாக களமிறங்க இருக்கிறார். அந்த படத்தை தமிழில் மைனா, செம்பி போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய பிரபு சாலமன் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Advertisement